Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையில் புதிய விமான சேவைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்தியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையில் 2003 ஜனவரி 31 ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட தற்போதுள்ள விமான சேவைகள் ஒப்பந்தத்தை (ASA) மேம்படுத்துவதற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்தது. அண்மைக் காலத்திய சர்வதேச சிவில் விமானசேவை அமைப்பின் (ICAO) வரையறைக்கு உட்பட்டதாக இந்த மேம்படுத்தல் ஏற்பாடு இருக்கும். சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகளையும், இரு நாடுகளுக்கும் இடையில் விமானத் தொடர்பை மேம்படுத்தும் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

2. புதிய விமான சேவைகள் ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு :

(i) தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கையின்படி திறந்த வான்வெளிப் பகுதி செர்பியாவுடன் முறைப்படுத்தப் பட்டுள்ளது. இப்போது இந்திய விமானங்கள் இந்தியாவில் இருந்து செர்பியாவில் எந்த இடத்துக்கும் செல்லலாம். அதேசமயத்தில் செர்பிய விமானங்கள் இந்தியாவில் 4 மெட்ரோ நகரங்களுக்கு – புதுடெல்லி, மும்பை மற்றும் பின்னர் குறிப்பிடப்படும் 2 நகரங்கள் – நேரடி சேவை அளிக்கலாம். இதைத் தவிர, வழித்தட மாறுதல்கள் மூலம் எந்த இடைப்பட்ட மற்றும் சேருமிடத்தைத் தாண்டிய இடத்துக்கும், நிர்ணயிக்கப்பட்ட விமானங்கள் இரண்டு தரப்பிலும் செல்ல முடியும்.

(ii) நிர்ணயிக்கப்பட்ட விமானங்கள் உள்நாட்டு விதிகளின்படி செயல்பட தகுதி பெற்றவையாகவும், வழித்தட அட்டவணையில் குறிப்பிட்டுள்ளதைவிட மறுதரப்பாரின் எல்லையில் ஏதாவது நான்கு (4) கூடுதல் முனையங்களுக்கும் செல்வதற்கு முடியும். அந்த 4 முனையங்கள் எந்த நேரத்திலும் குறிப்பிடப்படலாம்.

(iii) ஒவ்வொரு தரப்பிலும் நிர்ணயிக்கப்பட்ட விமானம், அதே தரப்பு, மற்ற தரப்பு மற்றும் மூன்றாவது நாட்டின் நிர்ணயிக்கப்பட்ட விமான நிறுவனங்களுடன் கூட்டுறவு மார்க்கெட்டிங் ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம்.

(iv) அது நேரடி தொடர்பை அளிப்பது மட்டுமின்றி, 3வது நாட்டு விமானங்களின் மூலமாகவும் தொடர்பை அளிக்கும். அது இந்திய விமானங்களுக்கும் லாபகரமானதாகவும் இருக்கும்.

(v) இரு நாடுகளும் ஒன்று அல்லது அதிக வான்வழிகளை நிர்ணயிக்க உரிமை உண்டு. முந்தைய ஏற்பாட்டின்படி ஒவ்வொரு தரப்பிலும் அதிகபட்சம் இரண்டு வான்வழிகள் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும்.

இந்தியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையிலான புதிய மேம்படுத்தப்பட்ட மற்றும் தாராளமயமாக்கப்பட்ட விமான சேவைகள் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையில் அதிக வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை அதிகப்படுத்தும் வாய்ப்புகளைக் கொண்டது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப இது அமையும். இது மேம்படுத்தப்பட்ட மற்றும் தடையற்ற தொடர்புக்கான சூழலை அளிக்கும். இரு நாடுகளின் விமான நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தை உறுதி செய்வதன் மூலம் வணிக வாய்ப்புகளை அதிகரிக்கும். இப்போது இரு நாடுகளுக்கு இடையில் எந்த இணைப்புநிலையும் இல்லை. மாற்றியமைக்கப்படும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் இணைப்பு நிலையை உருவாக்க வழி ஏற்படுத்தும்.

***