பி.எம்.இந்தியா
இந்தியாவுக்கும் சைப்ரசுக்கும் இடையே வணிகக் கப்பல் போக்குவரத்து ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்து இந்த ஒப்பந்தம் 2017 ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்டதாகும்.
வணிகக் கப்பல் போக்குவரத்து உடன்பாடு இரு நாடுகளுக்கும் இடையே கடல் வர்த்தகத்தில் இருந்த இடர்பாடுகளை அகற்றி மேம்பாட்டை உறுதிப்படுத்தும். இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையே சரக்கு போக்குவரத்தை ஊக்குவிப்பதுடன் மூன்றாம் தரப்பு நாடுகளிலிருந்தும் இத்தகைய போக்குவரத்துக்கு வழிவகுக்கும். இந்த ஒப்பந்தத்தினால் வேலை வாய்ப்பு, பணி நிலைமைகளில் மேம்பாடு கப்பல்களில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.