பி.எம்.இந்தியா
இந்தியாவுக்கும் நைஜீரியாவுக்கும் இடையே மாற்றியமைக்கப்பட்ட விமானச் சேவைகள் ஒப்பந்தக் கையெழுத்திடலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முந்தைய ஒப்பந்தம் 1978 ஜனவரி 31 –ந் தேதி கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் புதிய வடிவம் தற்போதைய சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் நெறிகளுக்கு ஏற்பவும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன மேம்பாடுகளைக் கருத்தில் கொண்டும் வரையப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே விமான சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றியமைக்கப்பட்ட உடன்பாடு இந்தியா, நைஜீரியா இடையிலான சிவில் விமான போக்குவரத்து தொடர்புகளில் முக்கிய அடையாளமாக விளங்குகிறது. இந்த உடன்பாடு இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், முதலீடுகள், சுற்றலா, பண்பாட்டு பரிவர்த்தனை ஆகியவற்றை வெகுவாக உயர்த்தும் திறன் கொண்டது.
இந்த விமானச் சேவைகள் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
****