Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையே அடிப்படை வசதி பொறியியல் துறையில் திறன் உருவாக்கம், தரம் உருவாக்கம் மற்றும் இருதரப்பு பரிவர்த்தனையில் தொழில் நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையே அடிப்படை வசதி பொறியியல் துறையில் திறன் உருவாக்கம், தரம் உருவாக்கம் மற்றும் இருதரப்பு பரிவர்த்தனையில் தொழில் நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இடையே அடிப்படை வசதி பொறியியல் துறையில் திறன் உருவாக்கம், தரம் உருவாக்கம் மற்றும் இருதரப்பு பரிவர்த்தனையில் தொழில் நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்


தங்களது அமைப்புகளிலும் துறைகளிலும் மாற்றத்தின் கூறுகளாக செயல்படுமாறு இந்தியக் குடிமைப் பணி அதிகாரிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். குடிமைப் பணி சேவைகள் தினத்தை முன்னிட்டு இன்று குடிமைப் பணி அதிகாரகளிடையே உறையாற்றிய அவர் 21 – ம் நூற்றாண்டில் குடிமைப் பணி அதிகாரிகள் தங்கள் பங்கு பணியை மறு வரையறை செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் கட்டுப்படுத்தும், முறைப்படுத்தும் நிர்வாகத் திறன்களுக்கு அப்பாற்பட்டு தங்களை மாற்றத்தின் தூண்டுகோல்களாக பாவிக்க வேண்டும் என்றார் அவர்.

நல்ல குழுக்களை உருவாக்குமாறு பிரதமர் குடிமைப் பணி அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். தனது மந்திரமான மாற்றத்திற்கு சீர்திருத்தம் என்பதை குடிமைப் பணி அதிகாரிகள் மாற்றத்திற்கு செயல் திறனுக்கு சீர்திருத்தம் என பொருள் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குடிமைப் பணி அதிகாரிகளின் செயல் திறன் மேம்பட்டால் மாற்றம் கட்டாயம் ஏற்படும் என்றா் அவர்.

மக்கள் பங்கேற்பு வெற்றிக்கு மிகவும் அடிப்படையானது என்று குறிப்பிட்ட பிரதமர் இது இன்று விருது பெறும் முயற்சிகளில் நன்கு காணக்கிடக்கிறது என்றார் அவர். எனவே மக்களுடன் சேர்ந்து குடிமைப் பணி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் அதனால்தான் அரசின் திட்டங்கள் களநிலையில் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றார்.

குடிமைப் பணி சேவைகள் தினம் இதுவரை நாம் கடந்துவந்த பாதையை மதிப்பீடு செய்து புதிய உறுதிப்பாட்டுடன் முன்நோக்கிச் செல்ல தீர்மானம் செய்ய உதவும் சந்தர்ப்பம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

வெற்றிகரமான தங்கள் நடவடிக்கைகளுக்கு விருதுபெற்றவர்களைப் பாராட்டிய பிரதமர் அவர்களது வெற்றி இதர குடிமைப்பணி அதிகாரிகளுக்கு உற்சாகம் ஊட்டக் கூடியது என்றார். இந்த ஆண்டு விருதுகளுக்கென 74 வெற்றித் திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். இது சென்ற ஆண்டுகளைவிட குறிப்பிடத்தக்க உயர்வு நிலை என்றும் அவர் கூறினார். எனினும் இந்த எண்ணிக்கை இந்தியாவின் மாவட்டங்களில் 10 சதவீதத்தை மட்டுமே குறிப்பதாக உள்ளது என்றும் இந்தவகையில் அனைத்து மாவட்டங்களும் துடிப்பாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் கூறினார்.

சோதனை முயற்சிகளில் ஈடுபடும் தைரியம் குடிமைப் பணி அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் மக்கள் நலன் கருதி இலக்குகளை அடைவதற்கான புதிய வழி வகைகளைக் காணுமாறு கேட்டுக் கொண்டார்.

தனது முயற்சி காரணமாக சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட செயலாளர்கள் குழுபற்றி குறிப்பிட்ட பிரதமர் இந்த அதிகாரிகள் தாமாக முன்வந்து அலுவலக நேரத்திற்கு அப்பாற்பட்டு விடுமுறை நாட்களிலும் வேலை செய்து ஆட்சி முறையின் முக்கிய அம்சங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள். இந்தக் குழுக்கள் தங்கள் குழிகளை உடைத்து புதிய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து வருகிறார்கள் என்றார் அவர். இந்தப் பணிகளுக்கென அவர்கள் 10,000 மனித மணி நேர உழைப்பை தந்திருக்கிறார்கள் என்றும் பிரதமர் கூறினார்.