Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கும் போர்த்துகல்லுக்கும் இடையில் பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய அரசாங்கத்தின்  பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் குறைகள் துறைக்கும், போர்த்துகீசிய குடியரசு அரசாங்கத்தின் பிரசிடென்சி மற்றும் நிர்வாக நவீனமயமாக்கல்  அமைச்சகத்துக்கும் இடையில், `பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் ஒத்துழைப்புக்காக’ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பொதுமக்கள் சேவை மேலாண்மையில் வேகமாக மாறிவரும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு போர்த்துக்கல்லில் பொதுமக்கள் சேவை அளிப்பில் வாடிக்கையாளர் சார்ந்த முறைமையை புரிந்து கொள்வதையும், இந்தியாவில் பொதுமக்கள் சேவையை மேம்படுத்தும் வகையில் உள்ள,  பொதுமக்கள் சேவை முறையில் இருக்கும் சிறந்த நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் சிலவற்றில் புதுமைகளை புகுத்துதல் மற்றும் அப்படியே ஏற்று, பயன்படுத்துதல் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ்ஒத்துழைப்புக்கான துறைகளில் அடங்குபவை, ஆனால் வரையறைக்குள் வராதவை :
a)    அரசில் டிஜிட்டல் மாற்றம்
b)    நிர்வாக எளிமையாக்கல் மற்றும் செயல்முறை மறு உருவாக்கம்
c)    பொதுமக்கள் சேவை அளிப்பு
d)    அலுவலர் திறன் உருவாக்கல் மற்றும் மேம்படுத்துதல்
e)    பொது நிர்வாகத்தில் நல்ல நிர்வாக நடைமுறைகளைப் பகிர்தல்
f)    பொதுமக்கள் குறைதீர்ப்பு நடைமுறை.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஒத்துழைப்புக்கான அம்சங்கள் பின்வருமாறு இருக்கும் :
a)    மூத்த ஆலோசனைக் குழு அமைத்து, உள்ள ஒத்துழைப்பு மற்றும் கூட்டுமுயற்சிகள் தொடர்பாக தற்போது செயல்பாட்டில் உள்ள கலந்துரையாடல்களுக்கு அமர்வுகளை ஏற்பாடு செய்தல்;
b)    அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்தல். மேற்குறிப்பிட்ட துறைகளில் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் ஆலோசனைகள் நடத்துதல்;
c)    பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பான நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ்கள் பரிமாற்றம் செய்து கொள்வது மற்றும் இந்தத் துறையில் நிபுணர்களை அனுப்பி வைத்தல்;
d)    இரு தரப்பிலும் வெளியீடு செய்யப்பட்ட பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு பொது வெளியீடுகள் மற்றும் அறிக்கைகளை பரிமாற்றம் செய்து கொள்வது;
e)    ஆய்வுப் பயணங்களுக்கு வசதிகள் செய்தல் மற்றும் பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் மூலமாக தகவல்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்தல்;
f)    பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் கையெழுத்திட்ட தரப்பினரால் கூட்டாக முடிவு செய்யப்பட்டவாறு பரஸ்பர நலன் பயக்கக் கூடிய மற்ற வகையிலான ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சி

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்படுத்தப் படுவதற்கு, பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்த கூட்டுப் பணிக் குழு பொறுப்பேற்கும்.

பின்னணி :

செம்மையான பொது நிர்வாக முறைமையில், குடிமக்களை மையமாகக் கொண்ட ஆன்லைன் சேவைகள் அளிப்பதுதான் அடிப்படையாக உள்ளது. அது வெளிப்படைத்தன்மை அளிப்பதாகவும், நிர்வாகத்தில் பொறுப்பேற்கும் நிலையை அளிப்பதாகவும், சமமான வளர்ச்சிக்கு வழி ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.
அரசு சேவைகளை நாடு முழுக்க ஆன்லைன் சேவை அளிக்கும் வகையில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதை இந்திய அரசு லட்சியமாகக் கொண்டுள்ளது. பொது நிர்வாக முறைமை, பொதுமக்கள் குறைதீர்வு நடைமுறை, மின்னணு நிர்வாகத்தைப் புகுத்துதல், டிஜிட்டல் இந்தியா போன்றவற்றை புதுப்பித்தலில் அரசின் முயற்சிகளை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. மின்னணு நிர்வாகத்தின் அடிப்படையில், குடிமக்களை மையமாகக் கொண்ட மேல்நிலையில் இருந்து இறுதி நிலைக்கு ஆன்லைன் சேவை அளிப்பதன் மூலம் `குறைந்தபட்ச அரசு தலையீட்டில் அதிகபட்ச ஆளுமை’ என்ற லட்சியத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
நல்ல நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களில் முன்முயற்சிகளில் சர்வதேச கூட்டுமுயற்சிகளை நாடுவதன் முயற்சிகளில் ஒரு பகுதியாக, DARPG இதுவரை சீனா, மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் செய்து கொண்டுள்ளது. சினா மற்றும் சிங்கப்பூருடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் புதுப்பித்தலில் / வெளியுறவு விவகார அமைச்சகத்தின் கலந்தாலோசனையில் உள்ளன. போர்த்துகல்லுடன் அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த நோக்கத்திலான ஒரு செயல்பாடாக உள்ளது.

*****