Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கும் போலந்துக்கும் இடையே விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்


இந்தியாவுக்கும் போலந்துக்கும் இடையே விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்த்ததில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 

விவசாயத்துறையில் நடப்பு நிலவரம், பயிர்களின் ஆரோக்கிய நிலை பற்றிய தகவல்கள் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய உயிரிகளால் ஏற்படும் அச்சுறுத்தல், விலங்குகளால் ஏற்படும் தொற்று நோய் அச்சுறுத்தல்கள் உள்ளிட்டவற்றில் தகவல் பரிமாற்றம் மற்றும் வேளாண்துறை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கியது இந்த ஒப்பந்தம். வேளாண்மை மற்றும் வேளாண் உணவுப் பதனீடு தொடர்பான சந்தைகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றில் பங்கேற்பது குறித்த அம்சங்களும் ஒப்பந்த்த்தில் இடம் பெற்றுள்ளன. ஒப்பந்த தரப்புகளின் மாநிலங்களிடையே வேளாண் உணவு வர்த்தகத்துக்கு ஆதரவு அல்லது அது சார்ந்த முயற்சிகளில் கூட்டு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலுக்கும் ஒப்பந்தம் வகை செய்கிறது.

 

இரு நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டுக் குழுவை அமைப்பதற்கும் ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்தக் குழு ஒத்துழைப்புக்கான திட்டங்களை தயார் செய்யும் : ஒப்பந்தத்தை அமல் படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்.

*****