பி.எம்.இந்தியா
இந்தியாவின் தரங்கள் நிறுவனத்திற்கும் மாலி குடியரசின் தரம் மற்றும் உறுதிப்படுத்துதல் மதிப்பீட்டு அமைப்புக்கும் இடையே மதிப்பீடுகளை தரப்படுத்தி உறுதிப்படுத்துவற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்தது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கும் மாலிக்குமிடையே நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதுடன் தரப்படுத்தி உறுதி செய்யும் மதிப்பீட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் பொது நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளவும் பரஸ்பர வர்த்தகத்துக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.