பி.எம்.இந்தியா
[
218KB ]
புதுதில்லி மானக்ஷா மையத்தில், இந்திய ஆயுத படை “இந்தியாவும் முதல் உலகப் போரும்” என்ற தலைப்பில் நினைவு கண்காட்சி நடத்தியது. இக்கண்காட்சியில், பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். முதல் உலகப் போரில் இந்திய படை வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் இக்கண்காட்சி பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் தெரிவித்ததாவது:-
ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் பல்வேறு போர்தளங்களில் இந்திய வீரர்கள் தீரத்துடன் பங்கேற்றதை உயிரோட்டத்துடன் கண்காட்சி எடுத்துக்காட்டுகிறது. நமது சிறந்த வீரர்களின் சந்ததிகளை பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
போரின்போது, தொலைதூர நிலங்களில் தங்களை தியாகம் செய்த 74,000 வீரர்களை பற்றித் தெரிந்துக்கொள்ள இந்த கண்காட்சிக்கு இளைஞர்கள் வருகை தர வேண்டும். இந்த போரில், உயிர்த் தியாகம் செய்த ஒவ்வொரு இந்திய வீரருக்கும் நான் தலை வணங்குகிறேன் என்று பிரதமர் தெரிவித்தார்.
இராணுவ தலைவர் ஜெனரல் தல்பிர் சிங்,கடற்படை தலைவர் அட்மிரல் ஆர்.கே. தோவன், விமான படை தலைவர், ஏர் சீப் மார்ஷல் அரூப் ரஹா, பாதுகாப்பு துறை செயலர் திரு. ஆர்.கே. மத்தூர் ஆகியோர் பிரதமரின் வருகையின் போது இடம் பெற்று இருந்தன.