Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவை நிலைத்தன்மையின் மையமாகவும், வளர்ச்சியின் எந்திரமாகவும் சுட்டிக்காட்டும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


சவாலான காலகட்டத்திலும் இந்தியா எவ்வாறு நிலைத்தன்மையின் மையமாகவும், வளர்ச்சியின் எந்திரமாகவும் திகழ்கிறது என்பதை சுட்டிக்காட்டும் திரு ஹரிஷ் சால்வேயின் கட்டுரையை, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

பிரதமரின் நிலையான தலைமை, அரசியல் தொடர்ச்சி ஆகியவையே இதற்குக் காரணம் என்று திரு சால்வே குறிப்பிடுகிறார். தெளிவான தேசியக் கண்ணோட்டம் இந்தியாவின் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை, நீண்டகால தேசக் கட்டமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“இக்கட்டான காலகட்டத்திலும் இந்தியா நிலைத்தன்மையின் மையமாகவும், வளர்ச்சியின் எந்திரமாகவும் திகழ்கிறது என்று திரு ஹரிஷ் சால்வே எழுதியுள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் நிலையான தலைமை, அரசியல் தொடர்ச்சிதான் இதற்குக் காரணம் என்று கூறும் அவர், தெளிவான தேசியக் கண்ணோட்டமானது இந்தியாவின் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை, நீண்டகால தேசக் கட்டமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.”

***

(Release ID: 2311313)

TV/IR/GS/SM