Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா அஷ்காபட் ஒப்பந்தத்தை ஏற்கும்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை மத்திய ஆசிய பகுதிக்கும் பாரசீக வளைகுடா பகுதிக்கும் இடையே சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு உதவும் சர்வதேச போக்குவரத்து மற்றும் எல்லை கடப்பதற்கான வழிப்பாதையான அஷ்காபட் ஒப்பந்தத்தை ஏற்பதற்கான தனது ஒப்புதலை அளித்தது.

ஒமன், ஈரான், துர்க்மினிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த அஷ்காபட் ஒப்பந்தத்தின் நிறுவன உறுப்புநாடுகள் ஆகும். பின்னர் கஜகிஸ்தான் நாடும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தை ஏற்பதன் மூலம் யூரேஷியா பகுதியுடன் வர்த்தக மற்றும் வணிகத் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள உதவும் வகையில் தற்போது செயல்பட்டு வரும் போக்குவரத்து மற்றும் எல்லைகடப்பதற்கான ஏற்பாடுகளை இந்தியா பயன்படுத்திக் கொள்ள முடியும். மேம்படுத்தப்பட்ட தொடர்புக்கான சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழிப்பாதையை அமல்படுத்துவதற்கான நமது முயற்சிகளுடன் இந்த ஏற்பாடு ஒத்திசைவு கொண்டதாகவும் அமையும்.

தற்போது இந்த ஒப்பந்தத்தின் பாதுகாவல் நாடாக இருக்கும் துர்க்மினிஸ்தானிடம் அஷ்காபட் ஒப்பந்தத்தினை ஏற்பது என்ற இந்தியாவின் நோக்கம் தெரிவிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் நிறுவன உறுப்பினர்களின் ஒப்புதலுக்குப் பிறகு இந்தியாவும் அதன் ஒரு பகுதியாக மாறும்.

*******