Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா – ஆஸ்திரேலியா 3-வது வருடாந்திர உச்சிமாநாடு கூட்டறிக்கை


ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஆண்டனி அல்பானீஸீன் அழைப்பின் பேரில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 ஜூலை 8 முதல் 10-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொள்கிறார்.  அவர் மெல்பெர்னில் இந்தியா – ஆஸ்திரேலியா 3-வது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார்.

அப்போது வரலாற்று உறவுகள், மக்களிடையேயான தொடர்புகள், பகிரப்பட்ட உத்திசார் நலன்கள், பரஸ்பர மரியாதை ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவை இருதலைவர்களும் நினைவுகூர்ந்தனர்.  விரைவாக மாறி வரும் உலகளாவிய சூழலில் உருவாகும் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும்  பிராந்தியத்தின் அமைதி, வளம், ஸ்திரத்தன்மைக்கு  நன்மை பயக்கக் கூடிய புதிய ஒத்துழைப்புக்கான வழிவகைகளை ஆராய்வதற்கும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் இருதலைவர்களும்  தங்களுடைய அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினார்கள்.

ராணுவம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது இருநாட்டுக் கூட்டாண்மையின் அடித்தளம் என்பதை இருநாட்டு பிரதமர்களும் உறுதிபடுத்தினார்கள். இதற்காக ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கூட்டுத் தீர்மானத்தை அவர்கள் அறிவித்தனர்.

இருநாடுகளுக்கும் இடையே, ஆலோசனை, ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக பாதுகாப்பு அமைச்சர்கள் வருடாந்திர உரையாடல் ஏற்பாடு செய்யப்படுவதை பிரதமர்கள் வரவேற்றனர். அமைதியான, ஸ்திரத்தன்மையுடைய வளமான இந்தோ – பசிபிக் பிராந்தியத்திற்கான தங்களுடைய பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வைக்கு கடல்சார் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்று பிரதமர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்தியா – ஆஸ்திரேலியா கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு வழிவகை மூலம் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்த இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இதன் மூலம் பிராந்தியப் பாதுகாப்பிற்கு பயனுடைய கடல்சார் ஒத்துழைப்பு முக்கியம் என்பதை அங்கீகரித்து அமைதியான, வளமான இந்தோ – பசிபிக் பிராந்தியத்திற்கான தங்கள் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மீண்டும் உறுதிபடுத்துகின்றன.

ஆஸ்திரேலியாவின் கடல்சார் எல்லை கட்டளை அமைப்பிற்கும்  இந்திய கடலோரக் காவல் படைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதை தலைவர்கள் வரவேற்றனர். ஆஸ்திரேலியாவின் முதலாவது பாதுகாப்பு வர்த்தகத் தூதுக்குழுவின் இந்தியப் பயணம், இந்தியா – ஆஸ்திரேலியா பாதுகாப்புத் தொழில்துறை  வட்டமேஜை மாநாடு மூலம் இருநாட்டுப் பாதுகாப்புத் தொழில்துறைக்கு இடையே தொடர்புகளை ஊக்குவிக்கும் முயற்சிகள் ஆகியவற்றை தலைவர்கள் வரவேற்றனர்.

இரு நாடுகளின் ராணுவ பயிற்சிக் கல்வி நிறுவனங்களுக்கு இடையே தொடர்புகளை தொடர்ந்து வலுப்படுத்துவதை தலைவர்கள் ஊக்குவித்தனர். 2028-29-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ராணுவக் கல்லூரியில் இந்தியாவின் ராணுவ பயிற்சியாளர் நியமிக்கப்படுவதை இருதலைவர்களும் எதிர்நோக்கியுள்ளனர்.

ஜெனரல் ராவத் இந்தியா – ஆஸ்திரேலியா இளம் அதிகாரிகள்  பரிமாற்றத் திட்டத்தில் 4-வது பதிப்பு ஆஸ்திரேலியாவில் நடத்தவிருப்பதை அவர்கள் வரவேற்றனர்.

அரசுகள், தொழில்துறை, கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பை விரைவுபடுத்தவும், இரு நாடுகளின் சூழல்களில் தொடர்பை ஏற்படுத்தவும் இருதரப்பு புதுமை கண்டுபிடிப்பு கட்டமைப்பை உருவாக்குவது குறித்து ஆராய பிரதமர்கள் உறுதி அளித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282687&reg=3&lang=1

***

SS/IR/KPG/SH