பி.எம்.இந்தியா
இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட் இடையே விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பயனளிப்பதாக அமையும். இரு நாடுகளிலும் மேற்கொள்ளப்படும் மிகச்சிறந்த வேளாண் நடைமுறைகள் மேம்படுத்துவது உற்பத்தித்திறனை உயர்த்துவது உலக சந்தைகளுக்கு வாய்ப்புக்களை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கும் ஒப்பந்தம் உதவும். இதனால் சமத்துவமும் உள்ளடக்கிய நிலைமையும் உருவாகும். விவசாய தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புக் காரணமாக புதுமையான தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தியும், உற்பத்தித் திறனும் உயர்ந்து நாட்டின் உணவுப் பாதுகாப்பும் வலுப்படுத்தப்படும்.