வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள எனது அமைச்சரவை சகாக்கள் திரு.அமித் ஷா, திரு.ஹர்தீப் சிங் பூரி, மற்றும் இதர அமைச்சர்களே, இந்திய தேசிய ராணுவ அறங்காவலர்களே, தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் உறுப்பினர்களே, நடுவர் குழு உறுப்பினர்களே, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோரக் காவல்படை மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர்களே, பேரிடர் மேலாண்மை விருது வென்ற வெற்றியாளர்களே, முக்கியப் பிரமுகர்களே, சகோதர, சகோதரிகளே !
இந்தியத் தாயின் வீரப் புதல்வர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளில், ஒட்டுமொத்த தேசத்தின் சார்பில், எனது தலைதாழ்ந்த மரியாதையை அவருக்கு உரித்தாக்குகிறேன். இந்த நாள் வரலாற்றுச் சிறப்புமிக்கது, இந்த காலகட்டம் மற்றும் நாம் அனைவரும் கூடியிருக்கும் இந்த இடமும் வரலாற்றுச் சிறப்புமிக்கவை தான். இந்திய ஜனநாயகத்தின் அடையாளச் சின்னமாகத் திகழும் நமது நாடாளுமன்றம், துணிச்சல்மிக்க நமது தியாகிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நமக்கு அருகிலுள்ள தேசிய போர் நினைவுச் சின்னம் மற்றும் பல்வேறு கட்டடங்கள், நமது செயல்பாடுகள் மற்றும் மக்களுக்கான நமது அர்ப்பணிப்பு உணர்வை பிரதிபலிக்கின்றன. இவை அனைத்திற்கும் மேலாக, தற்போது நாம் இந்தியா கேட் பகுதியில் நமது சுதந்திர தினப் பெருவிழாவைக் கொண்டாடி வருவதோடு, சுதந்திரமான, இறையான்மை கொண்ட இந்தியாவை அடைவோம் என்ற நம்பிக்கையை நமக்கு அளித்த நேதாஜி சுகாஷ் சந்திர போஸுக்கு மரியாதை கலந்த அஞ்சலியை செலுத்திக் கொண்டிருக்கிறோம். ‘‘சுதந்திரம் கோரி நான் பிச்சையெடுக்க மாட்டேன், நான் அதை அடைந்தே தீருவேன்‘‘ என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களிடம் பெருமிதத்துடன் கூறியவர் அவர். இந்திய மண்ணில், முதல் சுதந்திர அரசை நிறுவிய நேதாஜி–யின் பிரம்மாண்ட சிலை, இந்தியா கேட் அருகே டிஜிட்டல் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முப்பரிமாண மின்னொளி சிலை, விரைவில் பிரம்மாண்ட கிராணைட் சிலையாக மாற்றியமைக்கப்படும். தலைசிறந்த மாவீரரான நேதாஜி சுபாஷுக்கு, நன்றியுள்ள தேசம் செலுத்தும் மரியாதையே இந்த சிலை. நேதாஜி சுபாஷின் இந்த சிலை, நமது ஜனநாயக அமைப்புகள் மற்றும் வருங்கால சந்ததியினர், தேசத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையை நினைவுபடுத்துவதோடு, தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிப்பதாகவும் அமையும்.
நண்பர்களே,
கடந்த ஆண்டு முதல், நேதாஜி–யின் பிறந்த நாள் பராக்கிரம தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, இன்று சுபாஷ் சந்திர போஸ் பேரிடர் மேலாண்மை விருதுகள் வழங்கப்படுகிறது. நேதாஜி–யின் வாழ்க்கையிலிருந்து பெற்ற ஊக்கத்தால், இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. 2019 முதல் 2022 வரை இந்த விருதைப் பெறும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
2014-லிருந்து, பேரிடர் மேலாண்மையை திறம்பட மேற்கொள்ள ஏதுவாக, எங்களது அரசு, தேசிய அளவில் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிவாரணம், மீட்பு, மறுவாழ்வு மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். நாடு முழுவதும் தேசிய பேரிடர் மீட்புப் படையை வலுப்படுத்தி, நவீனப்படுத்தி, விரிவுபடுத்தியுள்ளோம். விண்வெளி தொழில்நுட்பத்தின் அடிப்படையில், திட்டமிடல் மற்றும் மேலாண்மையில் நாங்கள் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். நமது தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் பாதுகாப்புப் படையினர், தங்களது உயிரைப் பணயம் வைத்து ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றி வருகின்றனர். எனவே, இந்த நேரத்தில், அவர்ள் அனைவருக்கும் நமது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
‘அனைவரும் முயற்சிப்போம்‘ என்பது பற்றி நான் குறிப்பிடும்போது, அது அனைத்து மட்டத்திலும் மேற்கொள்ளப்படும் முழுமையான அணுகுமுறையாக இருக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறேன். பேரிடர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், நமது பாடத் திட்டத்திலும் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளோம். கட்டிடப் பொறியியல் மற்றும் கட்டிட வடிவமைப்பில், பேரிடர் மேலாண்மையை ஒரு பாடமாக வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அணைகளால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள அணைகள் பாதுகாப்பு சட்டத்தையும் எங்களது அரசு கொண்டு வந்துள்ளது.
நண்பர்களே, உலகின் எந்தப் பகுதியில் எப்போது பேரழிவு ஏற்பட்டாலும், துயரமளிக்கும் உயிரிழப்புகள் மற்றும் வெளியேற்றங்களுடன், பெருமளவிலான பொருளாதார இழுழப்பு பற்றியியும் விவாதங்கள் நடைபெறுகிறது. ஆனால், பேரிடர் காலத்தில் கட்டமைப்புக் குறைபாடு, கற்பனைக்கும் அப்பாற்பட்டது. எனவே தான், பேரிடர் காலங்களிலும் தாக்குப்பிடிக்கக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்குவது மிகவும் அவசியமாகிறது. அந்த வகையில், இந்தியா வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. நிலநடுக்க அபாயமுள்ள இடங்கள், வெள்ளப்பெருக்கு அல்லது புயல் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணியில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.
நண்பர்களே,
நேதாஜி எதையாவது செய்ய வேண்டுமென்று நினைத்துவிட்டால், அவரை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ‘செய்ய முடியும், செய்து காட்டுவோம்‘ என்ற நேதாஜி சுபாஷின் உறுதியிலிருந்து ஊக்கம் பெற்று, நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சித்தால், நேதாஜி கனவுகண்ட இந்தியாவை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். பராக்கிரம தினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, எனது உரையை நிறைவு செய்கிறேன். நன்றிகள் பல!
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792046
*****
भारत मां के वीर सपूत, नेताजी सुभाष चंद्र बोस की 125वीं जन्मजयंती पर पूरे देश की तरफ से कोटि-कोटि नमन: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 23, 2022
जिन्होंने भारत की धरती पर पहली आज़ाद सरकार को स्थापित किया था, हमारे उन नेताजी की भव्य प्रतिमा आज डिजिटल स्वरूप में इंडिया गेट के समीप स्थापित हो रही है।
— PMO India (@PMOIndia) January 23, 2022
जल्द ही इस होलोग्राम प्रतिमा के स्थान पर ग्रेनाइट की विशाल प्रतिमा भी लगेगी: PM @narendramodi
हमारे देश में वर्षों तक आपदा का विषय एग्रीकल्चर डिपार्टमेंट के पास रहा था।
— PMO India (@PMOIndia) January 23, 2022
इसका मूल कारण ये था कि बाढ़, अतिवृष्टि, ओले गिरना, इनसे बनी स्थितियों से निपटने का जिम्मा कृषि मंत्रालय के पास था।
देश में आपदा प्रबंधन ऐसे ही चल रहा था: PM @narendramodi
लेकिन 2001 में गुजरात में भूकंप आने के बाद जो कुछ हुआ, उसने आपदा प्रबंधन के मायने बदल दिए।
— PMO India (@PMOIndia) January 23, 2022
हमने तमाम विभागों और मंत्रालयों को राहत और बचाव के काम में झोंक दिया।
उस समय के जो अनुभव थे, उनसे सीखते हुए ही 2003 में Gujarat State Disaster Management Act बनाया गया: PM @narendramodi
हमने Relief, Rescue और Rehabilitation पर जोर देने के साथ ही Reform पर भी बल दिया है।
— PMO India (@PMOIndia) January 23, 2022
हमने NDRF को मजबूत किया, उसका आधुनिकीकरण किया, देश भर में उसका विस्तार किया।
स्पेस टेक्नालजी से लेकर प्लानिंग और मैनेजमेंट तक, best possible practices को अपनाया गया: PM @narendramodi
दुनिया के अलग-अलग देशों के बीच में, सेनाओं के बीच में हमने Joint Military Exercise बहुत देखी है।
— PMO India (@PMOIndia) January 23, 2022
लेकिन भारत ने पहली बार डिजास्टर मैनेजमेंट के लिए Joint ड्रिल की परंपरा शुरू की है: PM @narendramodi
नेताजी कहते थे- "कभी भी स्वतंत्र भारत के सपने का विश्वास मत खोना, दुनिया की कोई ताकत नहीं है जो भारत को झकझोर सके।"
— PMO India (@PMOIndia) January 23, 2022
आज हमारे सामने आज़ाद भारत के सपनों को पूरा करने का लक्ष्य है।
हमारे सामने आज़ादी के सौंवे साल से पहले नए भारत के निर्माण का लक्ष्य है: PM @narendramodi
आज़ादी के अमृत महोत्सव का संकल्प है कि भारत अपनी पहचान और प्रेरणाओं को पुनर्जीवित करेगा।
— PMO India (@PMOIndia) January 23, 2022
ये दुर्भाग्य रहा कि आजादी के बाद देश की संस्कृति और संस्कारों के साथ ही अनेक महान व्यक्तित्वों के योगदान को मिटाने का काम किया गया: PM @narendramodi
ये मेरा सौभाग्य है कि पिछले वर्ष, आज के ही दिन मुझे कोलकाता में नेताजी के पैतृक आवास भी जाने का अवसर मिला था।
— PMO India (@PMOIndia) January 23, 2022
जिस कार से वो कोलकाता से निकले थे, जिस कमरे में बैठकर वो पढ़ते थे, उनके घर की सीढ़ियां, उनके घर की दीवारें, उनके दर्शन करना, वो अनुभव, शब्दों से परे है: PM @narendramodi
मैं 21 अक्टूबर 2018 का वो दिन भी नहीं भूल सकता जब आजाद हिंद सरकार के 75 वर्ष हुए थे।
— PMO India (@PMOIndia) January 23, 2022
लाल किले में हुए विशेष समारोह में मैंने आजाद हिंद फौज की कैप पहनकर तिरंगा फहराया था।
वो पल अद्भुत है, अविस्मरणीय है: PM @narendramodi
नेताजी सुभाष कुछ ठान लेते थे तो फिर उन्हें कोई ताकत रोक नहीं पाती थी।
— PMO India (@PMOIndia) January 23, 2022
हमें नेताजी सुभाष की ‘Can Do, Will Do’ स्पिरिट से प्रेरणा लेते हुए आगे बढ़ना है: PM @narendramodi
At the programme to mark the unveiling of the hologram statue of Netaji Bose. https://t.co/OxRPKqf1Q7
— Narendra Modi (@narendramodi) January 23, 2022
A historic day,
— Narendra Modi (@narendramodi) January 23, 2022
A historic programme,
At a historic location…
The statue of Netaji Subhas Chandra Bose is a fitting tribute to his indelible contribution to our nation. pic.twitter.com/Azb4LF0o2E
Some unforgettable tributes to Netaji Subhas Chandra Bose. pic.twitter.com/AX7dxGswGk
— Narendra Modi (@narendramodi) January 23, 2022
Did you know that matters relating to disasters and disaster management earlier came under the agriculture department…
— Narendra Modi (@narendramodi) January 23, 2022
Much has changed in the last two decades and it is good to see this subject come to the mainstream of policymaking. pic.twitter.com/RzN0QPXyUU
We are making a sincere effort to ensure each and every contributor to India’s freedom struggle gets his or her due place in our history. pic.twitter.com/Zr8dV4A6vr
— Narendra Modi (@narendramodi) January 23, 2022