பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியா சிங்கப்பூர் இடையே தொழில்சார் சொத்து ஒத்துழைப்பு துறையில், தொழில் கொள்கை துறையும் மற்றும் வர்த்தகம்&தொழில் வளர்ச்சி அமைச்சகமும் இணைந்து சிங்கப்பூர் அறிவுசார் சொத்து அலுவலகம்(IPOS), சட்ட அமைச்சகம், சிங்கப்பூர் அரசு ஆகிவற்றுடன் போடப்பட இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. அக்டோபர் 4-7, 2016 தேதிகளில் இந்தியாவுக்கு சிங்கப்பூர் பிரதமர் வருகை தரும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
இந்த ஒப்பந்தம் தொழில்சார் சொத்துரிமை, காப்புரிமை, தொழில் லச்சினை ஆகிய விஷயங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும். அதுமட்டுமல்லாது புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவற்றை இருதரப்பிலும் இந்த ஒப்பந்தம் மேம்படுத்தும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக இருப்பவை:
• சிறந்த நடைமுறைகள், அனுபவங்கள், அறிவுசார் சொத்துரிமை சம்பந்தமான தகவல்கள் ஆகியவற்றை இருநாட்டு பொதுமக்கள், தொழில்கள், கல்வி அமைப்புகள் ஆகிய தரப்புகள் பறிமாறிக்கொள்வதன் மூலம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல்.
• அறிவுசார் சொத்துரிமை துறையில் சிறந்து விளங்கும் நிபுணர்களை பகிர்தல்.
• நல்ல பலன் தரும் நடைமுறைகள், அனுபவங்கள், அறிவுசார் சொத்துரிமை தொடர்பான விஷயங்கள் ஆகியவற்றை பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகங்கள், சிறு-குறு நிறுவனங்கள் ஆகியவற்றினிடையே பரஸ்பரம் பறிமாறிக்கொள்தல்.
• இயந்திரமயமாக்கல் மற்றும் நவீன திட்டங்களை செயல்படுத்துவதில் ஒத்துழைப்பு.
• அறிவுசார் சொத்துரிமை சார்ந்த பயிற்சியை உள்ளூர் அறிவுசார் சொத்துரிமை துறைக்கும், வியாபார சமுதாயத்திற்கும் வழங்குவது.
இந்தியா அறிவுசார் சொத்துரிமை சார்ந்த தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்வதன் வாயிலாக தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல் இருதரப்பு வணிகமும் பயன்பெறும். இருநாடுகளிலும் நிலவும் சிறந்த நடைமுறைகளை பகிர்வதால் இந்தியாவின் பரந்துபட்ட அறிவுசார் சொத்துகளுக்கு மேம்பட்ட பாதுகாப்பு கிடைக்கும். உலக அளவில் புதிய கண்டுபிடிப்புகள் துறையில் இந்தியா சிறந்து விளங்க இந்த நடவடிக்கை மிகப்பெரிய அளவில் உதவும். அதுமட்டுமல்லாது தேசிய கொள்கைகள் 2016ஐ செயல்படுத்துவதில் இது அடுத்த கட்டமாகவும் கருதப்படும்.