பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – ஜாம்பியா இடையே நீதித்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சமீப ஆண்டுகளில், இந்தியா – ஜாம்பியா இடையேயான சமூக, கலாச்சாரம் மற்றும் வர்த்தக உறவுகள் சரியான திசையில் மேம்பட்டு வருகிறது. எனவே, நீதித்துறையில் இருநாடுகள் இடையே செய்து கொள்ளப்படவுள்ள ஒப்பந்தம், நல்லுறவுகளை மேலும் அதிகரிப்பதுடன், நீதித்துறை சீர்திருத்த நடவடிக்கைகளில் புதிய பரிமாணத்தையும் ஏற்படுத்தும்.