பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு தய்பேயில் உள்ள இந்திய தய்பே அமைப்பு மற்றும் இந்தியாவில் உள்ள தய்பே பொருளாதார மற்றும் கலாச்சார மைத்திற்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் குறு, சிறிய மற்றும் நடுத்தர தொழில் மையங்களின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டது.
இரு பிரிவினருக்கு இடையே உள்ள குறு, சிறிய மற்றும் நடுத்தர தொழில் மையங்களுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை அதிகரிப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இந்த ஒப்பந்தம் தெளிவான கட்டமைப்பை வழங்கி, இரு பிரிவிலும் உள்ள குறு, சிறிய மற்றும் நடுத்தர தொழில் மையங்களின் வலு, சந்தை, தொழில்நுட்பம், திட்டங்கள் ஆகியவற்றை புரிந்துக் கொள்வதற்கான சூழலை ஏற்படுத்தும். மேலும், இரு பிரிவினரும் தங்களின் குறு, சிறிய மற்றும் நடுத்தர தொழில் மையங்களின் வர்த்தக முகாம்கள், கண்காட்சிகளில் பங்கேற்பது பிற பிரிவின் வர்த்தக சிறப்புக் குழு பரிமாற்றம், திட்டங்களை புரிந்துக் கொள்ளுதல், கூட்டு வாணிபம், தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றுக்கு இது உதவும். புதிய சந்தைகள், கூட்டு வாணிபம், சிறப்பு செயல்பாடுகளின் பரிமாற்றம், தொழில்நுட்ப கூட்டு முயற்சி ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் இந்திய குறு, சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும்.
இந்த ஒப்பந்தத்தில் இரு பிரிவினருக்கு இடையே எத்தவிதமான நிதி, சட்டம் அல்லது அரசியல் அற்பணிப்பு கிடையாது. நிதி சார்ந்த விஷயங்களில் இரு பிரிவினருக்கும் எந்தவிதமான கட்டாயமும் இருக்காது.
மொத்த தொழில் துறையுடன் ஒப்பிடுகையில் குறு, சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறை நிலையான அதிகபட்ச வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சுறுசுறுப்பான மற்றும் ஆற்றல் வாய்ந்த இந்த துறை புதிய கண்டுபிடிப்புகளையும் தற்போது ஏற்பட்ட பொருளாதார பிரச்சனையின் போதும் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கு பொருத்தமாக்கிக் கொள்ளும் தன்மையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப் பெரிய சவலாக உள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளது.