Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா-பிரேசில் இடையே எண்ணெய் மற்றும் இயற்கை வாயுப் பிரிவில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கும், பிரேசிலுக்கும் இடையே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுப் பிரிவில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுப் பிரிவில் இருதரப்புக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தக் கூடியதாகும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், பிரேசில் மற்றும் இந்தியாவில் ஆய்வு மற்றும் உற்பத்தி முன்முயற்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திரவ இயற்கை எரிவாயு திட்டங்களில் ஒத்துழைப்பு ஆகியவற்றில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு இருதரப்பும் பாடுபடும். எண்ணெய் எரிசக்தி, சுற்றுச் சூழல் ஆகியவற்றில் எரிசக்தி திறன், எரிசக்தி ஆராய்ச்சி மேம்பாடு, மண்டல எரிசக்தி உள்கட்டமைப்பு விரிவாக்கம் போன்ற எரிசக்தி கொள்கைகளை உள்ளடக்கிய இருதரப்புக்கு அப்பால், 3-ஆம் நாடுகளிலும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்த மாதத்தின் பிற்பகுதியில் பிரேசில் அதிபர் இந்தியாவுக்கு வருகை தரும்போது கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.