பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா-போர்த்துக்கல் இடையேயான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு, செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், புதுதில்லியில், ஜனவரி 6, 2017-ல் கையெழுத்தானது.
இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க விவகாரங்களில் பரஸ்பரம் சமமாக பயன்பெறவும், பரிமாறிக் கொள்ளும் வகையிலும் இருதரப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் கூட்டு அமைப்பு நல்லுறவை ஏற்படுத்துவதை இரு நாடுகளும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், கூட்டுப்பணிக் குழு அமைக்கப்படும். இதன்மூலம், அறிவியல்பூர்வ நிறுவனங்கள், ஆய்வு மையங்கள், பல்கலைக் கழகங்கள் அல்லது வேறு ஏதாவது நிறுவனங்கள் தேவைப்படும்போது, மற்ற நாடுகளின் உறுப்பினர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
***