பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நடைபெற்ற மத்திய அமைச்சரவையிடம், இந்தியா மற்றம் இத்தாலி இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கூட்டுறவிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுதில்லியில் 2017, அக்டோபர் 30 அன்று கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், இந்திய அரசு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், செயலர், திரு.ஆனந்த் குமார் மற்றும் இந்தியாவிற்கான இத்தாலிய தூதர் மேதகு திரு. லோரன்சோ ஏஞ்ஜனோலி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இருதரப்பிற்கும் சமமான பயன்கள் மற்றும் பரிமாறிக்கொள்ளுதல் என்ற அடிப்படையில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க பிரச்சினைகள் குறித்த தொழில்நுட்ப இருதரப்பு கூட்டுறவை ஊக்கப்படுத்தும் வகையில் கூட்டுறவிலான நிறுவன உறவுகளை ஏற்படுத்திட இந்தியா மற்றும் இத்தாலி நோக்கமாக கொண்டுள்ளன. இருதரப்பு கூட்டுறவுத் தொடர்பான பொருட்கள் குறித்து ஆய்வு செய்திடவும், கண்காணிக்கவும் மற்றும் கலந்துரையாடவும் கூட்டு செயற் குழு ஒன்றை ஏற்படுத்திட இந்த புரிந்துணர்வு வலியுறுத்துகிறது. வல்லுமையை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் தகவல் இணைவை கொண்டுவருதலை இது நோக்கமாக கொண்டுள்ளதுடன், இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்திடவும் உதவும்.
***