Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது. இந்த ஒப்பந்தம், கடந்த மாதம் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஹமீத் அன்சாரி அவர்கள் இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவுக்கு விஜயம் செய்தபோது கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இரு தரப்புக்கும் பயனளிக்கும் விதமாகவும், சமத்துவமான வகையிலும், பரஸ்பரம் ஒத்துழைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதே.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், திறன் அதிகரிப்பு, அறிவியல் தகவல்களை பகிர்ந்து கொள்தல், வணிகமல்லாத ஆராய்ச்சியில் ஈடுபடுதல், இரு தரப்புக்கும் ஏற்ற திட்டங்களை மேற்கொள்தல், முதலீடுகளை ஊக்குவித்தல், கொள்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்தல் மற்றும் இரு தரப்புக்கும் ஏற்ற பிற துறைகளில் ஒத்துழைப்பு அளித்தல் ஆகியவை செய்யப்படும்.

***