பி.எம்.இந்தியா
இந்தியா மற்றும் கத்தார் இடையேயான திறன் மேம்பாடு மற்றும் கல்வித் தகுதி அங்கீகரித்தலில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புரிந்தணர்வு ஒப்பந்தம் கத்தார் நாட்டில் இந்திய பணியாளர் இடப்பெயர்வு, திறன் மேம்பாடு மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு ஊக்கமளிக்கும்.