Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் கனடா இடையேயான உயர்கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் கனடா இடையே உள்ள உயர்கல்வி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டதற்கு ஒப்புதல் அளித்தது.

இந்த ஒப்பந்தம், இந்தியா மற்றும் கனடா இடையே ஏற்கனவே உள்ள உயர்கல்வி தொடர்பான உறவை உறுதி செய்யும்.

பின்னணி :

ஜுன் 2010ல் இந்தியா கனடா இடையே உயர்கல்வி கூட்டுறவு தொடர்பாக ஐந்து ஆண்டுகள் அமலில் இருக்கக் கூடிய வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐந்தாண்டின் இறுதியில், மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஒப்பந்தத்தை நீட்டிக்க, அந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டிருந்தது. இந்தியா மற்றும் கனடாவில் உள்ள உயர்கல்வி நிலையங்கள் இடையே, கல்வி மற்றும் ஆராய்ச்சியில் நிலவும் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கவும், கல்வி உறவுகளை உறுதிப்படுத்தவும், இந்த ஒப்பந்தத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.