Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் செக் குடியரசுக்கு இடையே, கனரக தொழில் தொடர்பாக ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து அமைச்சரவைக்கு விளக்கப்பட்டது.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவையிடம், இந்தியா மற்றும் செக் குடியரசுக்கு இடையே, கனரக தொழில், தொழில் கூட்டுறவு மற்றும் கட்டுமானம் குறித்து கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்து விளக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில் செக் குடியரசின் ஒத்துழைப்போடு ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் நவீனப்படுத்தப்படும். அறுபதுகளின் தொடக்கத்தில் செக் குடியரசு உதவியோடு நிர்மாணிக்கப்பட்ட கனரக பொறியியல் நிறுவனத்தின் மூன்று தொழிற்சாலைகள், மத்திய பொதுத்துறை நிறுவனத்தின் ஒரு தொழிற்சாலை, ராஞ்சியில் உள்ள ஒரு கனரக தொழிற்சாலை ஆகியன நவீனப்படுத்தப்படும்.

இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் இரு தரப்பின் வசதிக்கேற்ப, இரு தரப்பு நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப, சர்வதேச ஒப்பந்தங்களுக்கு ஏற்ப, கனரக தொழில்துறையில் ஒத்துழைப்பை மேற்கொள்ளவும், இரு தரப்பு ஒத்துழைப்பையும் வளர்ப்பதே.

****