பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, அக்டோபர் 2015ல், இந்தியா மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கிடையே தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறையில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஒப்பந்தம் குறித்து விவாதித்தது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியலில், தொழில்சார்ந்த, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் வணிக ரீதியிலான ஒத்துழைப்பை அதிகரித்து இரு தரப்பிலும் திறன் வளர்ப்பை அதிகரித்து, கூட்டுறவை மேம்படுத்தி, இரு நாடுகளுக்கிடையேயான உறவையும் வலுப்படுத்தும்.
இரு நாடுகளிடையே கூட்டுறவு ஏற்பட்டுள்ள முக்கிய துறைகள் :
1) ஜோர்டானிய தகவல் தொழில்நுட்பத் துறைக்காக திறன் வளர்க்கும் துறைகளை கண்டறிவது, தகவல் தொழில்நுட்பத்தில் வடிவமைப்பு மற்றும் திட்டமிடும் திறனை வளர்ப்பது
2) இரு நாடுகளையும் சேர்ந்த தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடையே முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சியில் கூட்டுறவை மேம்படுத்துவது.
3) மின் நிர்வாகம், மின் கல்வி, மொபைல்பேசி வழியான நிர்வாகம், மின் சுகாதாரம், தொலை மருத்துவம் போன்ற தகவல் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பது
4) கொள்கை ஒழுங்குமுறை துறைகளில் சிறந்த முறைகளை பகிர்ந்து கொள்வது, குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளில். சர்வதேச அளவில் போட்டியிடத்தக்க தகவல் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளை வளர்ப்பது.
5) இரு நாடுகளும் நடத்தும் சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது, நிபுணர்களை பகிர்ந்து கொள்வது
6) இரு நாடுகளும் ஒப்புக் கொள்ளும் இதர துறைகளில் இணைந்து பணியாற்றுவது.
மேலே குறிப்பிடப்பட்ட துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்துவதற்காக, இரு நாடுகளையும் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.