Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே விமான போக்குவரத்தில் தொழில்நுட்ப கூட்டுறவிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏ.ஏ.ஐ) மற்றும் அதன் பிரான்ஸ் நாட்டு சக, விமான போக்குவரத்து ஆணையம் பிரான்ஸ் ஆகியவற்றுக்கு இடையே விமானப் போக்குவரத்தில் தொழில்நுட்ப கூட்டுறவிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு தனது ஒப்புதலை அளித்தது.
இந்த தொழில்நுட்ப கூட்டுறவுத் திட்டம், இந்திய விமானநிலையங்கள் ஆணையத்தின் அலுவலர்களின் திறன் மற்றும் ஆற்றலை மேம்படுத்த பயன்படும். மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், பொறியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மேலாளர்கள் முதலானோருக்கு பயிற்சியளிக்கவும் உதவும்.