Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் மொசாம்பிக் நாடுகளுக்கு இடையிலான இளைஞர் நலன் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அமைச்சரவைக்கு விவரிக்கப்பட்டது


மொசாம்பிக் நாட்டுக்கு இந்திய பிரதமர் மோடி சென்றபோது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜூலை 7, 2016 அன்று இந்தியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கு இடையேயான விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் தொடர்பான மேம்பாட்டுக்கு இந்த ஒப்பந்தம் துணை புரியும். அதோடு இளைஞர்களுக்கிடையே கருத்துகள், மதிப்பீடுகள் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம் செய்து கொள்ளவும், இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கும் இது வழிவகுக்கும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு தொடர்பான சர்வதேசப் பார்வைக்கும், புரிதலுக்கும், மேம்பாட்டுக்கும், திறனறிதலுக்கும் இந்த ஒப்பந்தம் உதவி புரியும்.