Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையே கூட்டுறவு மற்றும் அது சார்ந்த துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக ஒப்பந்தம்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் மொரீஷியஸ் நாடுகளிடையே, கூட்டுறவுத் துறை மற்றும் அது தொடர்பான துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்வது தொடர்பாக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.

இரு நாடுகளிடையேயான இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். அதன் நிறையில் மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு தானாகவே புதுப்பிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள கூட்டு நடவடிக்கைகளில் உள்ள வரைவுப்படி குறுகிய கால மற்றும் நீண்டகால திட்டங்களில் ஒத்துழைப்பு மற்கொள்ளப்படும். இந்த ஒப்பந்தங்களில் உள்ள நோக்கங்களை நிறைவேற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளும்படி பணிகள் மேற்கொள்ள ஒரு வரைவுத் திட்டம் உருவாக்கப்படும்.


பின்னணி :

கூட்டுறவை வளர்ப்பதில் இந்தியாவில் உள்ள தேசிய கூட்டுறவு சங்கத்தின் அனுபவங்களால் பலனடையவும் மொரீஷியஸ் நாட்டின் கூட்டுறவு வளர்ச்சி நிதி மற்றும் இந்தியாவின் தேசிய கூட்டுறவு சங்கத்தின் இடையே ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் மொரீஷியஸ் அரசு ஆர்வம் காட்டி வந்தது. செப்டம்பர் 2012ல், மத்திய விவசாயம், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறையோடு ஒரு கூட்டம் நடைபெற்றது. ஒரு வருடம் கழித்து செப்டம்பர் 2013ல், அமைச்சரவை அளவில் சந்திப்பு நடைபெற்று, இரு நாடுகளிடையே கூட்டறவு சங்கங்கள் தொடர்பான சட்டங்கள் பரிமாறிக் கொள்ளுதல், கூட்டுறவு துறை தொடர்பாக தகவல் பரிமாற்றம், தொழில்நுட்ப பரிமாற்றம், நிபுணர்கள் பரிமாற்றம், கூட்டுறவு கல்வி நிலையங்களோடு இணைப்பு, ஆகியவை தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது தொடர்பான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன. மொரீஷியஸ் நாட்டிலிருந்து இரு மூத்த அதிகாரிகள், இந்தியாவில் உள்ள கூட்டுறவு நிலையங்களுக்கு வருகை தந்து, இரு நாடுகளிடையே கூட்டுறவு சங்கங்கள் தொடர்பாக ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.