Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே விண்வெளி ஆராச்சியில் ஒத்துழைப்பு தொடர்பாக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவைக்கு விளக்கம்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவையிடம், இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே விண்வெளி ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு தொடர்பாக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 2017ல், புது தில்லியில் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா மற்றும் வங்காளதேசம் நாடுகள், விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் பூமி தொலை உணர்வு, செயற்கைக் கோள் தொடர்பு, செயற்கைக் கோள் அடிப்படையிலான போக்குவரத்து, கோள்களின் அறிவியல், செயற்கைக் கோள் பயன்பாடு, விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பு மேற்கொள்ளும்.

இந்தியாவின் விண்வெளித் துறை, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் வங்காளதேச நாட்டின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை குழு ஆகிய இரு அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு கூட்டு பணிக் குழு உருவாக்கப்பட்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்த பணியாற்றும்.

விண்வெளி ஆராய்ச்சி, பூமி தொலை உணர்வு, செயற்கைக் கோள் தொடர்புகள், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளியில் புதிய ஆராய்ச்சிகள் ஆகியவற்றுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரும் ஊக்கத்தை அளிக்கும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்களை சம்பந்தப்பட்ட நாடுகளின் துறைகள் அந்தந்த நாடுகளின் சட்ட விதிகளுக்கு உட்பட்டும், அந்த நாடுகளின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட்டுக்கு உட்பட்டும் வழங்கும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் திட்டங்கள் வணிக நோக்கம் அல்லாமலோ அல்லது வணிக நோக்கத்திலோ உருவாக்கலாம். அல்லது இரு நாடுகளும் வருவாயை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் உருவாக்கலாம்.

விண்வெளித் துறையில் கூட்டு நடவடிக்கைகள் மூலமாக மனித குலத்துக்கு பயனளிக்கும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பிராந்தியம் மற்றும் இரு நாடுகளின் அனைத்துப் பகுதிகளும் பயன்பெறும்.

பின்னணி :

இந்தியா மற்றும் வங்காளதேசம் நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு மேற்கொள்ள பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளன. இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான வரைவை வங்காளதேசம், அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் ஆகஸ்ட் 2016ல் அளித்தது. இது அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு, வங்காளதேசம் நாடு டிசம்பர் 2016ல் இதற்கு ஒப்புதல் அளித்தது. இந்தப் பின்னணியில் 8 ஏப்ரல் 2017 அன்று புதுதில்லியில், அமைதி நோக்கத்துக்காக விண்வெளி ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் புதுதில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

****