பி.எம்.இந்தியா
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் எழுதிய கட்டுரை ஒன்றை பிரதமர் திரு. நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில், ‘இந்தியாவைக் கண்டறிதல்‘ என்ற நிலையிலிருந்து, ‘இந்தியா‘ மீது ஆழமான நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் ஒரு தீர்க்கமான மாற்றத்தை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.
தொடர்ச்சியாக நீண்ட காலம் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பணியாற்றும் நரேந்திர மோடியின் வெற்றிக்கு, மக்களுடன் அவர் கொண்டுள்ள வலுவான நம்பிக்கையே காரணம் என்று ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார். இந்த நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டே இந்தியாவின் மாற்றத்திற்கான பயணம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தனது கட்டுரையில் பாராட்டியுள்ளார். இதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் திரு. மோடி, இந்தக் கருத்துகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271395®=48&lang=1
***
TV/VK/RJ
This article by former President Shri @ramnathkovind celebrates India's longest-serving democratically elected Prime Minister in consecutive terms, also reflecting on how the last 12 years have marked a decisive shift from the idea of discovering India to building a deeper trust… pic.twitter.com/4IPdls2nWq
— PMO India (@PMOIndia) June 10, 2026