பி.எம்.இந்தியா
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 4-1 என்ற கணக்கில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்து கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தச் சாதனையைத் தனித்துவம் வாய்ந்தது என்று வர்ணித்த பிரதமர், இளம் வீரர்களின் அற்புதமானத் திறமையை இது பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் திரு மோடி தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:
“ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 4-1 என்ற கணக்கில் சிறப்பான வெற்றியைப் பெற்று கோப்பையை வென்ற நமது ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இது உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
இந்தச் சாதனை, நமது இளம் வீரர்களின் அற்புதமானத் திறமையை வெளிப்படுத்துகிறது. ஒட்டுமொத்த அணிக்கும் எனது வாழ்த்துகள்!”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309880®=3&lang=1
***
TV/BR/SH
Congratulations to our Junior Men’s Hockey Team on winning the Asia Cup with an emphatic 4-1 win in the final. It is indeed a remarkable achievement.
— Narendra Modi (@narendramodi) September 13, 2026
This feat reflects the immense talent of our young players. Best wishes to the entire team!