பிரதமர் திரு நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளின் பரிணாம வளர்ச்சியையும், தரமான கல்வி, முழுமையான மேம்பாடு ஆகியவற்றின் மூலம் பழங்குடியினக் குழந்தைகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் அவற்றின் பங்கையும் இக்கட்டுரை விவரிக்கிறது என பிரதமர் கூறியுள்ளார். கூடுதல் படிப்புகள், இருமொழிக் கல்வி, தொழில்நுட்ப வசதியுள்ள வகுப்பறைகள், விளையாட்டு, தொழிற்பயிற்சி போன்ற முக்கிய முன்முயற்சிகளையும், ஐஐடி, எய்ம்ஸ், பிற முதன்மை நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் சாதனைகளையும் இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள், தரமான கல்வியின் மூலம் பழங்குடியினக் குழந்தைகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.
பழங்குடியின பெருமை தினத்தன்று குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளின் பரிணாம வளர்ச்சி குறித்தும், பழங்குடியின மாணவர்களுக்குத் தரமான கல்வியையும் முழுமையான வளர்ச்சியையும் வழங்குவதில் அதன் பங்கு குறித்தும் கட்டுரை எழுதியுள்ளார்.
கூடுதல் இணைப்புப் படிப்புகள், இருமொழிக் கல்வி, தொழில்நுட்ப வசதியுள்ள வகுப்பறைகள், விளையாட்டு, தொழிற்பயிற்சி போன்ற முன்முயற்சிகளையும், தற்போது ஐஐடி, எய்ம்ஸ், பிற முதன்மை நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் சாதனைகளையும் அவர் எடுத்துரைக்கிறார்.
கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை!
****
(Release ID: 2336589)
SK/PLM/RJ
Eklavya Model Residential Schools are creating new opportunities for tribal children through quality education. On Janjatiya Gaurav Diwas, Hon'ble @VPIndia, Thiru @CPR_VP, writes about the evolution of EMRS and its role in providing quality education and holistic development to tribal students. He highlights initiatives such as bridge courses, bilingual teaching, technology-enabled classrooms, sports and vocational training, along with the achievements of students who are now entering IITs, AIIMS and other premier institutions. A must-read!
— PMO India (@PMOIndia) November 15, 2026