Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா- லாவோ இடையே விமான போக்குவரத்து உடன்பாட்டுக்கு ஒப்புதல்


இந்தியா, லாவோ மக்கள் ஜனநாயக குடியரசுடன் புதிய விமான சேவை உடன்பாட்டுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்பாடு இருநாடுகளுக்கு இடையே பெரு வணிகம், முதலீடு, சுற்றுலா மறும் கலாச்சார பரிமாற்றங்களை ஊக்குவிக்க வகை செய்யும். அத்துடன் சிவில் விமான போக்குவரத்திலும் வளர்ச்சியை உருவாக்கும். இருநாட்டு விமான நிறுவனங்களும் விமான போக்குவரத்து தொடர்புகளை உரிய பாதுகாப்புகளுடன் அதிகரிக்கவும், வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் இது வகை செய்யும்.

இந்த உடன்படிக்கையின் படி இருநாட்டு விமான நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் பரஸ்பரம் சம வாய்ப்புகளுடன் விமான சேவைகளில் ஈடுபடும். எந்தெந்த வழித்தடங்கள், எத்தனை முறைகள் இயக்கப்பட வேண்டும் என்பது பின்னர் முடிவாகும் . இருநாடுகளுக்கும் இடையிலான விமான போக்குவரத்திற்கான அடிப்படை கட்டமைப்பாக இந்த உடன்பாடு இருக்கும்.