பி.எம்.இந்தியா
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஃபின்லாந்து அதிபர் திரு அலெக்சாண்டர் ஸ்டப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.
இந்தியா – ஃபின்லாந்து இடையே இருதரப்பு உறவுகளை அந்நாட்டு அதிபரின் இந்திய பயணம் மேலும் வலுவடையச் செய்யும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் ஃபின்லாந்து அதிபர் திரு அலெக்சாண்டர் ஸ்டப் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய பயணத்தின்போது, குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பயணம் இருநாடுகளுக்குமிடையே வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் ஃபின்லாந்து அதிபர் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது;
“இந்தியா வந்துள்ள ஃபின்லாந்து அதிபர் திரு அலெக்சாண்டர் ஸ்டப்பை வரவேற்கிறோம். தங்களது கருத்துக்களுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். தங்களது இந்திய பயணம் இருநாடுகளுக்கிடையேயான உறவுகளை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். நாளை நடைபெறவுள்ள சந்திப்பு மற்றும் ரைசினா மாநாட்டில் நிகழ்த்தவுள்ள தங்களது முக்கியத்துவம் வாய்ந்த உரையை கேட்க ஆவலுடன் இருக்கிறேன்.
***
(Release ID: 2235256)
TV/SV/RK/KR
Welcome to India, President Alexander Stubb. I fully agree with you, your visit will take India-Finland relations to new heights. I eagerly look forward to our meeting tomorrow and to your keynote address at the Raisina Dialogue 2026. @alexstubb https://t.co/pJs0N3J9Mr
— Narendra Modi (@narendramodi) March 4, 2026