Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய அமெரிக்க இணைய உறவுக்கான கட்டமைப்பு குறித்தத் தகவல் இதழ்


இணைய உறவு என்பது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரு நாடுகளின் இணையம் தொடர்பான உறவு, பொதுவான இலக்கு, பொதுவான பார்வை, மற்றும் பொதுவான கொள்கைகள் குறித்து எடுத்துக் காட்டுகிறது. இது தொடர்பான நல்லுறவை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த இரு நாடுகளும், இணைய கூட்டுறவு தொடர்பாக கீழ்கண்ட வரைவு திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளன.

இணையம் தொடர்பான இந்திய அமெரிக்க கூட்டுறவு வரைவுத் திட்டத்தில் கீழ்கண்டவை முக்கிய அம்சங்களாக இடம் பெற்றுள்ளன.

• வெளிப்படையான, பாதுகாப்பான, நம்பிக்கையான இணைய சூழலை பராமரித்தல்.

• இணையத்தை புதிய கண்டுபிடிப்புகள், பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் வணிகத்துக்கு பயன்படுத்துதல்.

• வெளிப்படையான முறையில் தகவல்கள் வெளியாவதை உறுதி செய்தல்.

• இணைய வழி குற்றங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பாக தனியார் துறை மற்றும் அரசுத் துறைகளிடையே கூட்டுறவை மேம்படுத்துதல்.

• இணைய வழி குற்றங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, சர்வதேச அளவிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.

• கலாச்சார மற்றும் மொழி சார்ந்த வேறுபாடுகளை அங்கீகரித்தல்.

• சர்வதேச அளவில் இணைய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை தொடர்பாக சர்வதேச சட்டங்களை செயல்படுத்துவது குறித்த உறுதி. குறிப்பாக ஐக்கிய நாடுகள் அவையின் விதிகளின்படி ஒரு நாட்டின் இணைய செயல்பாடுகள் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த உறுதியான நிலைபாடு.

• இணைய நிர்வாகத்தில் பல்வேறு பங்கு வகிக்கும் வகையில் அரசுத் துறைகள், பொது சமூகம், தனியார் துறை ஆகியவற்றை செயல்பட வைத்து, அவற்றின் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.

• இணைய பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பில் அரசுத் துறைகளுக்கு முக்கிய பங்கு.

• இணைய பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சிகளில் திறன் வளர்த்தலின் முக்கியத்துவத்தை உணர்தல்.

• இரு நாடுகளைச் சேர்ந்த காவல் துறை மற்றும் சட்டத்தை செயல்படுத்தும் இதர துறைகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துதல். இணையத்தில் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல்.

• நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விஷயங்களை பாதுகாப்பதில் ஒத்துழைப்பு நல்குதல். இது தொடர்பாக இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு கீழ்கண்ட முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

• இணைய பாதுகாப்பு தொடர்பான முக்கிய செயல்முறைகளை அடையாளம் காணுதல், ஒத்துழைத்தல் மற்றும் பகிர்ந்து கொள்ளுதல்.

• இரு நாடுகளுக்கிடையே உள்ள ஒப்பந்தங்களின்படி, இணைய தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான தகவல்களை விரைவாக பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கான முறைகளை கண்டறிதல்.

• தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்புக்கு இணைய தாக்குதல்களால் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்ள இரு நாடுகளின் ஒத்துழைப்போடு திட்டங்களை வடிவமைத்தல் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப செயல்படுதல்.

• இணைய பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சிகளில் ஒத்துழைப்பு, இணைய பாதுகாப்பு குறித்த ஆய்வுகளுக்கு அங்கீகாரம், இணைய பாதுகாப்பு தொடர்பான மென்பொருள் உருவாக்குதல் மற்றும் கலந்தாய்வு மேற்கொள்ளுதல்.

• தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை பாதுகாப்பது தொடர்பாக செயல்முறைகளை பகிர்ந்து கொள்ளுதல்.

• இணைய குற்றங்கள் தொடர்பாக காவல்துறையினர் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துதல், அது குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்துதல், பேச்சுவார்த்தைகள் நடத்துதல்.

• இணைய பாதுகாப்பு தொடர்பாக காவல்துறையினரின் திறனை கூட்டு பயிற்சிகளின் மூலம் அதிகரித்தல், இணைய குற்றங்கள் தொடர்பான சாட்சி மற்றும் ஆவணங்களை இந்திய மற்றும் அமெரிக்க சட்டங்களின்படி பகிர்ந்து கொள்ளுதல்.

• டிஜிட்டல் தடய அறிவியல், இணைய குற்றங்கள், சட்ட வழிமுறைகள் தொடர்பாக கூட்டாக திறன் வளர்ச்சி நிகழ்ச்சிகளை நடத்துதல்.

• இணையம் தொடர்பாக அரசுகளின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு ஏற்றார்ப்போல இருக்குமாறு நடவடிக்கைகள் எடுத்தல்.

• சர்வதேச பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் அரசு நிபுணர்கள் தகவல் தொழில்நுட்பத் துறை குறித்து வகுத்துள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப, அமைதிக் காலத்தில் நடவடிக்கைகள் எடுத்தல்.

• கீழ்கண்ட நடவடிக்கைகளை தானாக முன்வந்து எடுத்தல்.

o மக்களுக்கு சேவை செய்வது தொடர்பான முக்கிய தகவல் தொழில்நுட்ப விபரங்கள் சேதப்படுவது போல எந்த விதமான இணைய நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கக் கூடாது.

o இணைய வழிக் குற்றங்கள் தொடர்பாக, இணைய வழிக் குற்றங்களை கண்டறியும் பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளில் எந்த நாடும் குறுக்கிடக் கூடாது. இணையத்தில் குற்றம் இழைக்கும் வகையில் இணைய பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தக் கூடாது.

o ஒரு நாடு அதன் எல்லைக்குள்ளிருந்து மற்றொரு நாட்டில் உள்ள கணினிகளின் மீது இணைய வழி தாக்குதலை தொடர்ந்தால், உள்ளூர் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களின்படி, அந்தக் குற்றங்களை ஆராய்வது, சாட்சிகளை சேகரிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஒத்துழைத்தல்.

o வணிக ரீதியான தகவல் தொழில்நுட்ப தகவல்களையும், அறிவுசார் காப்புரிமை பெற்ற தகவல்களையும், வேறொரு நிறுவனத்துக்கோ அல்லது போட்டியாளருக்கோ பலன் அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கு எந்த நாடும் ஆதரவு அளிக்கக் கூடாது.

• தொலைதொடர்புத் துறை மற்றும் தொலைதொடர்பு உபகரணங்கள் குறித்த பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் தொடர்பான விவகாரங்களில் ஒத்துழைப்பு மேற்கொள்ளுதல்.

• இணையத்தில் நிலைத்தன்மை ஏற்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான புரிதலை ஏற்படுத்துதல்.

• தகவல் தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவோரிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவது குறித்த தகவல் பரிமாற்றம்.

• இணைய வழி குற்றச் சம்பவங்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்துதல்.

• இணைய பாதுகாப்பு தொடர்பாக கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.

• இணைய நிர்வாகம் தொடர்பாக பல்வகை பங்குதாரர்களை ஊக்குவித்தல்.

• ICANN மற்றும் IGF போன்ற இணைய நிர்வாக அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்துதல், இரு நாடுகளையும் சேர்ந்த இணையத்தில் பங்கு வகிப்பவர்களை பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கச் செய்தல்.

• நாடுகடந்த இணைய வழிக் குற்றங்கள் தொடர்பான ஒத்துழைப்பை மேற்கொள்ள கலந்துரையாடல் நடத்துதல்.

• இந்தியாவின் முக்கியமான இணைய தகவல்களை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

• இரு தரப்பு உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்புக் குழு போன்ற அமைப்புகளின் மூலமாக தொழில்நுட்பம் தொடர்பான கொள்கைகளை புரிந்து கொள்ளுதல். இரட்டை தொழில்நுட்பத்தை இரு நாடுகளும் பயன்படுத்துதல்.

இந்திய அமெரிக்க இணைய உறவுகள் குறித்த வரைவுத் திட்டங்கள் அடுத்த 60 நாட்களில் கையெழுத்தாகும்.

***