பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு மத்திய புது மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம் மற்றும் மொசாம்பிக் அரசுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மொசாம்பிக் நாட்டின் குடியரசுத் தலைவர் டாக்டர் பிலிப் நியுசி இந்தியாவிற்கு ஆகஸ்ட் 5, 2015 அன்று பயணம் மேற்கொண்டார். அப்போது, புதுதில்லியில் மத்திய புது மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம் மற்றும் மொசாம்பிக் அரசின் கனிம வளம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும்.
பின்னணி
இரு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப ரீதியான உறவை மேம்படுத்துவது, இரு நாடுகளுக்கும் பயன் அளிக்கும் வகையில் புது மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி சார்ந்த விஷயங்களில் முதலீட்டை அதிகரிப்பது ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். புது மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறையில் வேலை வாய்ப்பு, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறையில் சிறப்பு பயிற்சி திட்டங்கள், ஆய்வு மற்றும் வளர்ச்சி, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறையில் தொழில்நுட்ப பரிமாற்றம், பல்வேறு புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி சார்ந்த அனுபவங்கள் பரிமாற்றம், (சூரிய ஒளி சக்தி, காற்றாலை, சுற்றுச்சூழல் சார்ந்த எரிசக்தி) புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறையில் தனியார் அமைப்பு, அறிவியல் சார்ந்த பயணங்கள், பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் ஆகியவை இதன் முக்கிய அம்சமாகும்.
T