பி.எம்.இந்தியா
தற்போதைய உலகச் சூழல் ஒரு அரிய வாய்ப்பை அளித்துள்ளது; இந்தியாவை அரவணைத்துக் கொள்ள உலகமே ஆர்வமாக இருக்கிறது. இந்த நேரத்தில் இந்தியா நம்பிக்கையோடு முன்னேறி செல்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார். உலகெங்கிலும் இருந்து வந்திருக்கும் இந்திய இயக்கங்களின் தலைவர்களுக்கிடையே உரையாற்றிய பிரதமர், தற்போதுள்ள வாய்ப்புகளைக் கொண்டு சர்வதேச அளவில் இந்தியா ஒரு சமநிலை சக்தியாக மட்டுமல்லாமல் முன்னிலை வகிக்கும் ஒரு நாடாக இருக்கச் செய்ய வேண்டும் என்று வலியுறித்தினார், பழைய சிந்தனைகளை விட்டுத் தள்ளுமாறு அவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். மாறிவரும் உலக சூழ்நிலைகளை விரைவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
உலகத்தின் முன் இந்தியாவை முன்னிலைப்படுத்துவதில் இயக்கங்கள் தலைவர்களுக்கு இருக்கும் பங்கினை வலியுறுத்தி பேசுகையில், இந்தியாவின் புகழ் பெற்ற கலாச்சாரத்தின் துடிப்பான பிரதிநிதிகள் நீங்கள் என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து ஒரு தெளிவான மனம் அவர்கள் அயராது பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இருபத்தியோராம் நூற்றாண்டில் நிலவும் பூசல்கள் குறித்தும் பிரதமர் பேசினார். அப்போது, உலக அமைதி மற்றும் செழிப்பிற்கு புதிய பங்கேற்புகளும், அச்சுறுத்தல்களும் தோன்றியுள்ளன என்று குறிப்பிட்டார். இந்தியா என்றும் சகோதரத்துவத்தை நம்பும் நாடு. அதனால், உலக அமைதிக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலுக்கு எதிராக நடக்கும் உலகளாவிய போராட்டத்திற்கு உதவ வேண்டியது இந்தியாவின் கடமை என்று தெரிவித்தார்.
பருவநிலை மாற்றம் குறித்த சவால்களைப் பற்றி கூறுகையில் சுற்றுச்சூழலை பாதுகாத்தல் என்பது இந்திய காலச்சாரத்தில் ஒரு பங்கு என்று பிரதமர் குறிப்பிட்டார். அதனால், பருவநிலை மாற்றம் குறித்த சவால்களை எதிர்த்து போராடுவதில் இந்தியா முதன்மை வகிக்க வேண்டும். அதோடு மற்ற நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும். இந்திய கலாச்சாரத்தில் “இயற்கையை நேசிப்பது” என்பது ஒரு அங்கமாகும். பிரதமர் சர்வதேச யோகா தினம் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டதற்கு வெளிநாடுகளில் உள்ள இந்திய சமூகத்திற்கு பாராட்டு தெரிவித்தார். மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு யோகா மூலம் ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார். இந்தியாவிற்கு வருகைதந்த வெளி நாடுகளின் முன்னனி தலைவர்கள், வருகை புரியவுள்ள தலைவர்களுடன் தொடர்ந்து நல்லுறவை வளர்த்துக் கொள்வது, இந்திய பண்பாட்டை தெரியப்படுத்த அனைத்தையும் கணிணி முறை நூலகமாக்க வேண்டும்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் நம் நாட்டிற்கு ஒரு பெரிய பலம் என்பதை நிதி அயோக் அங்கீகாரித்துள்ளது. இந்த பலத்தை மேலும் வலுப்படுத்த இயக்க தலைவர்கள் புதுமையான வழிகளை கண்டறிய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
உலகமெங்கும் உள்ள இயக்கங்களில் பின்பற்றப்படும் சிறந்த நடவடிக்கைகளை ஒன்றினைத்து மற்ற பகுதிகளுக்கும் அதனை பகிர்ந்துகொள்ள செய்யவேண்டும் என்று பிரதமர் கூறினார். தூய்மை என்ற கலாச்சாரத்தை வளர்க்க இயக்கங்கள் பங்களிக்கவேண்டும். இந்திய கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் இணைய நுலகத்ததை தயார் செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் திரு. வி. கே. சிங், வெளியுறவு துறை செயலர் திரு. எஸ். ஜெய்ஷங்கர் ஆகியோரும் உடன் இருந்தனர்.