Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய உணவுக் கழக ஊழியர்களின் ஓய்வூதியப் பயன்களின் ஒரு பகுதியாக ஓய்வூதியம், ஓய்விற்குப் பின்பு மருத்துவத் திட்டங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் பொதுத்துறை நிறுவனங்கள் துறையின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்திய உணவுக் கழக ஊழியர்களின் ஓய்வூதியப் பயன்களின் ஒரு பகுதியாக ஓய்வூதியம் மற்றும் ஓய்விற்குப் பிந்தைய பின்பான மருத்துவத் திட்டங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்த தனது ஒப்புதலை வழங்கியது.
ஊழியர்களின் தற்போதிய ஊதிய அளவில் காண்கையில், இந்த இரு திட்டங்களையும் சேர்த்து ஆண்டுக்கு ரூ. 134.4 கோடி நிதியை கூடுதலாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இந்திய உணவுக் கழக ஊழியர்களின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்
1. வரம்பு: (I, II, III மற்றும் IV ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த) அனைத்து ஊழியர்களும் 1.12.2008 அன்று சம்பளப் பட்டியலில் இடம்பெற்றிருந்த அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட இத்திட்டதின் கீழ் பயன்பெறுவார்கள்.

2. தகுதி: பணிக்காலத்தில் இறந்தவர்களைத் தவிர மற்றவர்கள், ஓய்வு பெறுவதற்கு முன்பு குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

3. அமலாக்கப்படும் நாள்: 1.12.2008 முதல். (திருத்தப்பட்ட ஊதியம் மற்றும் படிகள் அமல்படுத்தப்படும் நாள்)

4. நிர்வாகத்தின் பங்களிப்பு: 1.12.2008 அன்று பணியில் இருந்த அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து தற்போதைய ஊழியர்களைப் பொறுத்தவரையில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றின் 10 சதவீதம்.

5. ஊழியர்களின் கட்டாய பங்களிப்பு: அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றின் 2 சதவீதம். விருப்ப ரீதியான பங்களிப்பு – அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் அதிகபட்சமாக 25 சதவீதம்.

6. பயன்கள்: ஓய்விற்குப் பிறகு (ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை என்ற வகையில்) ஓய்வூதியம் மற்றும் இறப்பிற்கான காப்பீடு.

இந்திய உணவுக் கழக ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத்திற்குப் பிறகான மருத்துவ வசதித் திட்டத்தின் சிறப்பம்சங்கள்

1. வரம்பு: தற்போது ஊழியர்களின் நிதியைக் கொண்டு செயல்படும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ வசதித் திட்டத்தின் உறுப்பினர்களாக இருப்பவர்கள் உள்ளிட்டு, I, II, III மற்றும் IV ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.

2. தகுதி: பணிக்காலத்தில் இறந்தவர்களைத் தவிர மற்றவர்கள், ஓய்வு பெறுவதற்கு முன்பு குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

3. நிர்வாகத்தின் பங்களிப்பு: 01.4.2016 முதல் நிலவும் ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் 3.83 சதவீதம்.

4. ஊழியர்களின் பங்களிப்பு: ஓய்வு பெறும் காலத்தில் இறுதியாகப் பெற்று வந்த அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி/ பணியில் இருந்தபோது இறுதியாகப் பெற்று வந்த அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி (துணைவருக்கு) குறைந்தபட்சமாக ரூ. 10,000.
5. வரம்பு: இத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ஊழியர், அவரது துணைவர் மற்றும் அவரைச் சார்ந்துள்ள மாற்றுத் திறன் கொண்ட குழந்தை ஆகியோர் இந்தியாவின் எந்தவொரு மருத்துவமனையிலும் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரம்பிற்கு உட்பட்டு மேற்கொள்ளும் மருத்துவச் செலவுகளை உள்ளடக்கியதாக அமையும்.

பின்னணி:

இந்திய உணவுக் கழகம் உணவு தானியங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வது, சேமிப்பது, பகிர்ந்தளிப்பது ஆகியவற்றை மேற்கொள்வதற்காக உணவுக் கழகங்களுக்கான சட்டம், 1964இன் கீழ் 1965ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாகவே நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்ற குறிக்கோளை அடைவதில் மிக முக்கியமான பங்கினை அது ஆற்றியுள்ளது. அதன் அத்தியாவசமான முக்கியத்துவம், செயல்பாட்டின் அளவு மற்றும் இதர அளவீடுகளைக் கருத்தில் கொண்டு, மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ’அ’ பட்டியலில் அடங்குவதாக இந்திய உணவுக் கழகம் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.