பி.எம்.இந்தியா
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கும் ஐக்கிய அரபு எமிரெட்டுகளின் காப்பீட்டு ஆணையத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பின்னேற்பு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2016 பிப்ரவரி மாதம் கையெழுத்திடப்பட்டது.
காப்பீட்டு மேற்பார்வைத் துறையில் தகவல் தொடர்பு வழிமுறை ஒத்துழைப்பு கட்டமைப்பை வழங்குவதன் மூலம் இந்த இரண்டு ஆணையங்களுக்கும் இடையே உயர் நிலையிலான ஒத்துழைப்புக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. இரு நாடுகளின் சட்டங்கள் வரைமுறைகள் ஆகியன கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வது அல்லது அமலாக்குவது தொடர்பான ரகசியத் தகவல்கள் உட்பட வரைமுறை சார்ந்த மேற்பார்வைத் தகவல்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் மேலும் கூடுதலான பரஸ்பர நம்பிக்கையை இந்த ஒப்பந்தம் உருவாக்கும்.