பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்திய தபால் & தொலைத்தொடர்பு கணக்குகள் மற்றும் நிதி சேவை ‘அ’ நிலை பணிநிலைப் பிரிவு ஆய்விற்கான ஒப்புதலை கீழ்க்கண்ட சிறப்பியல்புகளுடன் வழங்கியுள்ளது :
(அ) பணிநிலைப்பிரிவின் மொத்த எண்ணிக்கையை 420-லிருந்து 376-ஆக குறைத்தல்
(ஆ) தொலைத்தொடர்பு கணக்குகளுக்கான கட்டுப்பாட்டு இயக்குநர் என்ற புதிய உயர்நிலை பதவி தோற்றுவித்தல்
(இ) ஒரு கூடுதல் எச்.ஏ.ஜி.+ நிலை பணியிடத்தை தோற்றுவித்தல் மூலம் மொத்த நிலை எண்ணிக்கையை 2 ஆக உயர்த்துதல்
(ஈ) இரு கூடுதல் எச்.ஏ.ஜி. நிலை பணியிடங்களை தோற்றுவித்தல் மூலம் மொத்த நிலை எண்ணிக்கையை 6-லிருந்து 8-ஆக உயர்த்துதல்
(உ) 18 கூடுதல் எஸ்.ஏ.ஜி. நிலை பணியிடங்களை தோற்றுவித்தல் மூலம் மொத்த நிலை எண்ணிக்கையை 37-லிருந்து 55-ஆக உயர்த்துதல்.
(ஊ) ஜே.ஏ.சி. நிலை பணியிடங்களை 111-லிருந்து 90-ஆக குறைத்தல்.
(எ) எஸ்.டி.எஸ். நிலை பணியிடங்களை 198-லிருந்து 86-ஆக குறைத்தல்.
(ஏ) 21 ஜே.டி.எஸ்.. நிலை பணியிடங்களை தோற்றுவித்தல் மூலம் மொத்த நிலை எண்ணிக்கையை 67-லிருந்து 88-ஆக உயர்த்துதல்.
(ஐ) 46 காப்பு பணியிடங்களை தோற்றுவித்தல்.
பின்னனி:
இந்திய தபால் & தொலைத்தொடர்ப்பு கணக்குகள் மற்றும் நிதி சேவை “அ” நிலை 1972-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு, தொலைத்தொடர்புகள் துறை மற்றும் தபால் துறைக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஐ.பி.&டி.ஏ.எப்.எஸ்., தொலைத்தொடர்புத் துறையில், உரிமம்/ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணம் ஆய்வு மற்றும் வசூலித்தல், ஸ்பெக்ட்ரம் ஏலம் விடுதல், யு.எஸ்.ஓ. திட்ட கண்காணிப்பு மற்றும் மானிய மேலாண்மை, நிதி கட்டுப்பாடு, வரவு செலவு திட்டம் தயாரித்தல், கணக்கிடுதல், ஓய்வூதியம் வழங்குதல், உள்தணிக்கை மற்றும் நிதி ஆலோசனை போன்ற பணிகளை மேற்கொள்கின்றன. ஐ.பி.&டி.ஏ.எப்.எஸ்., தபால் துறையில், நிதி ஆலோசனை, வரவு-செலவு திட்டம் தயாரித்தல், கட்டணம் நிர்ணயித்தல், கணக்கிடுதல் மற்றும் உள்தணிக்கை பணிகள் மேற்கொள்கின்றன.
சமீப காலங்களில், தொலைத்தொடர்புத் துறை மற்றும் தபால் துறை செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொலைத்தொடர்பு பிரிவில், சேவை வழங்குதல், கட்டுப்பாடு மற்றும் கொள்கை உருவாக்குதல் போன்ற தொடக்க நிலையிலிருந்து தற்போது துறையின் கொள்கை உருவாக்குதல், உரிமம் வழங்குதல் மற்றும் பன்னாட்டு சேவை பொறுப்பு போன்ற பணிகளை மேற்கொள்கின்றன. தொலைத்தொடர்பு துறையிலிருந்து பெறப்படும் வரவுகள், குறிப்பாக உரிம கட்டணம், ஸ்பெக்டரம் பயன்பாட்டு கட்டணங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏல மதிப்பீடு ஆகியவை இந்திய அரசின் வரியில்லாத வருவாயில் பெரும் பங்காக உள்ளது.
அதே போன்று, தபால் துறை வழங்கும் சேவைகள் தரம் மற்றும் அளவில் மாறுதலுக்குட்பட்டுள்ளதோடு, சில்லரை விற்பனை, வங்கி, காப்பீடு, கணிணிமயமாக்கப்பட்ட செயல்பாடுகள் போன்றவற்றில் துறை ஈடுபட்டுள்ளது. மேலும், இரு துறைகளின் தணிக்கை நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டியுள்ளது.
இந்த உண்மைகள் மற்றும் பிரிவில் பல்வேறு நிலைகளில் ஏற்பட்ட தேக்கங்கள் காரணமாக ஐ.பி.&டி.ஏ.எப்.எஸ். அமைப்பின் மீது ஆய்வு மேற்கொள்ள நேரிட்டது.