Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய பட்டய கணக்காளர் பயிற்சி நிறுவனம் மற்றும் தென்னாப்பிரிக்க பட்டயக் கணக்காளர் பயிற்சி நிறுவனம் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு அமிச்சரவை ஒப்புதல்


இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனம் மற்றும் தென்னாப்பிரிக்கப் பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனத்திற்கு இடையே பரஸ்பர அங்கீகரத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

விவரங்கள்:

அமைச்சரவையின் இந்த ஒப்புதல் இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனம் மற்றும் தென்னாப்பிரிக்கப் பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனம் இடையே கணக்கிடும் அறிவாற்றல் மேம்பாடு, நிபுணத்துவ மற்றும் அறிவுசார் மேம்பாடு, அந்தந்த உறுப்பினர்களின் ஆர்வத்தை மேம்படுத்தவும் இந்தியாவிலும் தென்னாப்பிரிக்காவிலும் கணக்கிடும் நிபுணத்துவத்தில் நேர்மறையான மேம்பாட்டுக்கு பங்களிக்கவும் பரஸ்பர ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த உடன்படிக்கை:

1, உள்ளூர் கணக்கியல் கல்வித் தகுதியுடன் தற்போதைய இந்திய பட்டயக் கணக்காளர் பயிற்சி நிறுவனத்தின் கல்வித் தகுதியுடன் சேர்த்து, தென்னாப்பிரிக்க சந்தையில் தொழில் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும

  1. இரு கணக்கீட்டுப் பயிற்சி நிறுவனங்களுக்கு இடையே வலிமையான பணி உறவுகளை ஏற்படுத்தும்.
  2. தொழில்நிபுணர்கள் இரு பக்கமும் நகரவும், இருநாடுகளிலும் உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கு புதிய அளவீடுகளை அளிக்கும்.

பயன்கள்:

இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனம் தென்னாப்பிரிக்க பட்டயக் கணக்காளர்கள் பயிற்சி நிறுவனத்துடன் நெருக்கமான உறவை பராமரிக்கவும் யுக்திபூர்வமாக இது மிகவும் முக்கியம் என்பதுடன் இந்தப் பிராந்தியத்தில் தனது உறுப்பினர்களின் நலன்களை வலுப்படுத்தவும் இது முக்கியமாகும். கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட உறவு இயல்பில் யுக்திபூர்வமானது என்பதுடன், பரஸ்பர பயன் அளிக்கக்கூடியது. இந்த உடன்படிக்கை இந்திய பட்டய கணக்காளர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புக்களை இந்த பிராந்தியத்தில் அளிக்கும் என்பதுடன் அவர்கள் மூலம் இந்தியாவுக்கு கூடுதல் நிதி அனுப்பப்படும்.

பின்னணி:

இந்தியப் பட்டயக் கணக்காளர் பயிற்சி நிறுவனம் என்பது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட சட்டபூர்வமான அமைப்பு. பட்டய கணக்காளர்களை வரன்முறைப்படுத்துகிறது பட்டயக் கணக்காளர் சட்டம் 1949. தென்னாப்பிரிக்கப் பட்டயக் கணக்காளர் பயிற்சி நிறுவனம் தென்னாபிரிக்காவின் கணக்கியல் அமைப்பு என்பதுடன் உலகின் முன்னணிப் பயிற்சி நிறுவனமாகும்.

*****