Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே போதைப் பொருள், மருந்துப்பொருட்கள், மன நிலைமாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்கள், ஊக்க மருந்துகளை சட்டவிரோதமாக கடத்துவதை தவிர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தம்


 

இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே போதைப் பொருள், மருந்துப்பொருட்கள், மன நிலைமாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்கள், ஊக்க மருந்துகளை சட்டவிரோதமாக கடத்துவதை தடுக்க பரஸ்பரம் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு  பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 பலன்கள்

 

இந்த ஒப்பந்தம் போதைப் பொருள், மருந்துப்பொருட்கள், மன நிலைமாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்கள், ஊக்க மருந்துகளை சட்டவிரோதமாக கடத்துவதை தடுக்க பரஸ்பரம் ஒத்துழைப்பதற்கு உதவும். கண்டறியப்பட்டுள்ள துறைகளில், சிறந்த செயல் முறையுடன் செயல்பட இரு நாடுகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்க இது உதவும். இது இரு நாடுகளின் அரசுகளுக்கும் இடையே நிறுவன கலந்துரையாடலை ஊக்குவிக்கும். இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்ட பின், இரு நாடுகளுக்கு இடையேயான போதைப் பொருள் கடத்தல் தடுக்கப்படும்.  

 

 

****