Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்துஸ்தான் கிருமிநாசினி நிறுவனத்தின் கடன் தொகைக்காக காலியிடத்தை விற்பனை செய்ய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்துஸ்தான் கிருமிநாசினி நிறுவனத்தின் (HAL) கடன் தொகைக்காக மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில் பிம்பிரி பகுதியில் உள்ள நிறுவனத்தின் கூடுதலான மற்றும் காலியிடத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி:

1. இந்துஸ்தான் கிருமிநாசினி நிறுவனத்தின் கடன் மற்றும் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தள்ளுபடி போக மீதமுள்ள ரூ.821.17 கோடி கடனை அடைக்க, நிறுவனத்தின் கூடுதலான மற்றும் காலியிடமான 87.70 ஏக்கர நிலம் விற்கப்படும் (உண்மையில் விற்பனை செய்யப்படும் இடப்பகுதி, தொழில் நிறுவனங்கள் மற்றும் நிதி மறுகட்டுமான வாரியத்தின் (BIFR) விதிகளின்படி, பெறப்படும் ஏலத் தொகையின் அடிப்படையில் முடிவுசெய்யப்படும்). இதற்கான வெளிப்படையான போட்டி ஏலத்தில் மத்திய/மாநில அரசு துறைகள், அரசு அமைப்புகள், மத்திய/மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், ஊரக வளர்ச்சி அமைப்புகள் ஆகியவை பங்கேற்கலாம்.

2. இந்திய அரசின் கடன் மற்றும் வட்டி ஆகியவை சேர்த்து ரூ.307.23 கோடியும் (கடன் அளவு ரூ.186.96 கோடி மற்றும் 30.9.2017 வரையான காலத்துக்கு வட்டித் தொகை சுமார் ரூ.120.27 கோடி), பல்வேறு நிலுவைத் தொகைகள் ரூ.128.68 கோடியும் தள்ளுபடி செய்யப்படும்.

3. கூலி, சம்பளம் மற்றும் உடனடித் தேவையான முக்கியச் செலவுக்காக உடனடி கடனாக ரூ.100 கோடி வழங்கப்படும். இந்துஸ்தான் கிருமிநாசினி நிறுவனத்தின் நிலத்தை விற்பனை செய்வதன் மூலம், மத்திய அரசுக்கு கடன் திருப்பி அளிக்கப்படும்.

இந்த ஒப்புதல் மூலம், நிறுவனத்தின் சொத்துக்களை உயர்ந்தபட்ச அளவில் அரசு பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், நிறுவனத்தின்

1. மறுவாழ்வு

2. விற்பனை (அல்லது)

3. மூடுவது

குறித்து மத்திய அரசு முடிவுகளை எடுக்கும்.

இந்தத் திட்டம்/பரிந்துரையை செயல்படுத்தும்போது, இந்துஸ்தான் கிருமிநாசினி நிறுவனம் கடன் இல்லாத நிலையை எட்டும். வரவு செலவு கணக்குகள் சீரமைக்கப்படும். இதையடுத்து, அமைச்சகங்களின் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வழிவகை ஏற்படும்.

மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் உள்ள பிம்பிரி பகுதியில் உள்ள இந்துஸ்தான் கிருமிநாசினி நிறுவனத்தின் நிலத்தை விற்பதன்மூலம், மோசமான நிலையில் உள்ள தொழிலாளர்களின் பாதிப்புகள் குறையும். கடன் தொகை சரிக்கட்டப்பட்டு, வரவு செலவு கணக்கு சீராகும்போது, அமைச்சகங்களின் குழு அளித்துள்ள பரிந்துரைகளை செயல்படுத்த வழி ஏற்படும்.