Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐதராபாத்தில் இந்திய அமெரிக்க கூட்டு ஏற்பாட்டில் உலகத் தொழில்முனைவு உச்சிமாநாடு


உலகத் தொழில்முனைவு உச்சிமாநாடு, வரும் நவம்பர் மாதம் 28ந் தேதி முதல் 30ந் தேதி வரை ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இது பற்றி, பிரதமர் திரு. நரேந்திர மோடி, டுவீட்டர் வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

”இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐதராபாத்தில் இந்திய அமெரிக்க கூட்டு ஏற்பாட்டில் உலகத் தொழில்முனைவு உச்சிமாநாடு நடைபெற இருக்கிறது.

தொழில் முனைவோரையும், உலகத் தலைவர்களையும் ஒன்றிணைக்க இது தனித்துவமிக்க வாய்ப்பாகும்.

ஐதராபாத் உலகத் தொழில்முனைவு உச்சிமாநாடு-2017ல் அமெரிக்க பிரதிநிதிகள் குழுவில் திருமிகு. இவான்கா டிரம்ப் இடம் பெறுவதை எதிர் நோக்கியுள்ளேன்”.

****