பி.எம்.இந்தியா
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட உலகில் மாற்றமிகு படைப்புகளை அளித்துள்ள அவர், திரைப்பட உலகின் மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்தார் என்று பிரதமர் கூறியுள்ளார்.
கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம், குறிப்பிடத்தக்கது என்று திரு மோடி தெரிவித்துள்ளார். இந்த துயரமான தருணத்தில் தனது எண்ணங்கள் அவருடைய குடும்பத்தினருடனும், ரசிகர்களுடனும் உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஓம் சாந்தி என்று பிரார்த்தித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“பாரதிராஜாவின் மறைவு மிகவும் கவலையளிக்கிறது, தமிழ் திரைப்பட உலகில் மாற்றமிகு படைப்புகளை அளித்துள்ள அவர், திரைப்பட உலகின் மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்தார். கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம், குறிப்பிடத்தக்கது. இந்த துயரமான தருணத்தில் எனது எண்ணங்கள் அவருடைய குடும்பத்தினருடனும், ரசிகர்களுடனும் உள்ளது. ஓம் சாந்தி ”
***
TV/IR/RJ/SE
The passing of Thiru Bharathiraja Ji is very saddening. He was a towering figure of the cinema world whose works transformed Tamil cinema. Particularly noteworthy was his portrayal of rural life. My thoughts are with his family and admirers in this hour of grief. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) June 11, 2026