பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை வருமானத்தின் மீதான வரிவிதிப்பு தொடர்பாக இரட்டை வரிவிதிப்பைத் தவிர்க்கவும், நிதிசார்ந்த ஏய்ப்பு நடவடிக்கைகளைத் தடுக்கவும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்கொள்வதற்கான மரபுகளை நிறைவுபடுத்தவும், கையெழுத்திடவும் தனது ஒப்புதலை வழங்கியது.
வேறு சில மாற்றங்களோடு, தற்போதைய நவீன சர்வதேச தரத்திற்கு உகந்த வகையில் தகவல்களை பரிமாறிக்கொள்ள தற்போதுள்ள மரபுசார் விதிமுறைகளை மேம்படுத்துகிறது. மேலும் இந்தியாவும் சரிசமமான தகுதியுடன் பங்கேற்று வரும் அடித்தள அரிப்பு மற்றும் லாபத்தை மாற்றி விடுவது ஆகியவை குறித்த திட்டத்திற்கான செயல்பாடுகள் குறித்த அறிக்கைகளின் கீழ் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச தரம் தொடர்பான ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்குத் தேவையான மாற்றங்களையும் இந்த மரபுசார் விதிமுறைகள் செய்யும். இரு தரப்பு நாடுகளும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட வகையில் குறைந்தபட்சத் தரங்களை கடைப்பிடிப்பதுடன், அடித்தள அரிப்பு மற்றும் லாபங்களை இடம் மாற்றுவது தொடர்பான செயல் அறிக்கைகளிலும் தேவையான மாற்றங்களை இந்த மரபுசார் விதிமுறைகள் கொண்டுவரும்.