பி.எம்.இந்தியா
அரசாட்சி முறையின் பல்வேறு துறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர ஆலோசனைகளை தெரிவிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இரண்டு செயலர்கள் குழு தங்களின் எண்ணங்களையும் யோசனைகளையும் பிரதமரிடம் புதன் கிழமை அன்று (ஜனவரி 20, 2016) பகிர்ந்து கொண்டது. சிறந்த அரசாட்சி : சவால்களும் வாய்ப்புகளும், வேளாண் மற்றும் அதைசார்ந்த துறைகளில் விவசாயி சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த தங்களின் ஆலோசனைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடியிடம் வழங்கியது.
மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், திருமதி. சுஷ்மா சுவராஜ், திரு. நிதின் கட்கரி, திரு. மனோகர் பாரிக்கர், மத்திய அரசின் செயலர்கள் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். விளக்க காட்சி தொகுப்பின்போதும் அதன் பின்னரும் பார்வையாளர்கள், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த விளக்க காட்சி பற்றிய பல்வேறு கேள்விகள் எழுப்பி, தங்களின் ஆலோசனைகளையும் வழங்கினர்.