Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இரண்டு செயலர்கள் குழு பிரதமரிடம் தங்களின் யோசனைகளையும் எண்ணங்களையும் வழங்கினர்

இரண்டு செயலர்கள் குழு பிரதமரிடம் தங்களின் யோசனைகளையும் எண்ணங்களையும் வழங்கினர்


பிரதமர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அரசாட்சி முறையின் பல்வேறு துறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர இரண்டு செயலர்கள் குழு தங்களின் எண்ணங்களையும் யோசனைகளையும் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டனர். புதுமையான வர செலவு கணக்கிடுதல் மற்றும் அதன் சிறந்த அமலாக்கம், தூய்மையான இந்தியா மற்றும் கங்கை நதியை தூய்மைப்படுத்துதல் ஆகிய திட்டங்கள் குறித்த தங்களின் ஆலோசனைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடியிடம் வழங்கினர்.

மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், திரு. அருண் ஜெட்லி, திருமதி. சுஷ்மா சுவராஜ், திரு. நிதின் கட்கரி, மத்திய அரசின் செயலர்கள் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். விளக்க காட்சி தொகுப்பின்போதும் அதன் பின்னரும் பார்வையாளர்கள் பலரும் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த விளக்கம் பற்றிய பல்வேறு கேள்விகள் எழுப்பி, தங்களின் ஆலோசனைகளையும் வழங்கினர்.

இதற்கு முன்பு ஜனவரி 12 அன்று முதல் குழு எரிசக்தி பாதுகாப்பு மற்றும் திறன் குறித்த விளக்க காட்சி தொகுப்பை வழங்கினர்.