பி.எம்.இந்தியா
நிர்வாகத்தின் பல்வேறு துறைகள் குறித்து தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்குமாறு, அரசு செயலாளர்களுக்கு பிரதமர் விடுத்த அழைப்பின்படி, 21 ஜனவரி 2016 அன்று, இரண்டு செயலர் குழுக்கள் (1) அனைவரின் பங்கோடு கூடிய விரைவான வளர்ச்சி மற்றும் (2) வேலை வாய்ப்பைப் பெருக்கும் திட்டங்கள் ஆகியவை குறித்து, பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் புதிய யோசனைகளை தெரிவித்தன.
இறுதியாக பேசிய பிரதமர், யோசனை தெரிவித்த எட்டு செயலாளர் குழுக்களையும் பாராட்டினார். இத்தகைய முயற்சிகள், அனைவரும் குழுவாக செயல்பட்டு, நாட்டின் நலனுக்காக பாடுபடுவதற்காகவே என்றார். இத்தகைய யோசனைகளை தெரிவிப்பதற்காக ஒட்டுமொத்தமாக 10,000 வேலை மணி நேரங்களை செலவழித்த அதிகாரிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
மத்திய அமைச்சர்கள் திருமதி.சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் திரு மனோகர் பாரிக்கர் மற்றும் அனைத்துத் துறை செயலாளர்களும் உடனிருந்தனர். நிகழ்ச்சியின் நடுவே பிரதமர் உள்ளிட்ட பார்வையாளர்கள், இந்த செயல் விளக்கம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி, புதிய ஆலோசனைகளை தெரிவித்தனர்.