Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இலங்கையின் முன்னாள் அதிபர் திருமதி. சந்திரிகா குமாரதுங்கா பிரதமருடன் சந்திப்பு

இலங்கையின் முன்னாள் அதிபர் திருமதி. சந்திரிகா குமாரதுங்கா பிரதமருடன் சந்திப்பு

இலங்கையின் முன்னாள் அதிபர் திருமதி. சந்திரிகா குமாரதுங்கா பிரதமருடன் சந்திப்பு


இலங்கையின் முன்னாள் அதிபர் திருமதி. சந்திரிகா குமாரதுங்கா பண்டாரநாயகா பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். புதுதில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் “மோதல் தவிர்ப்பு மற்றும் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வுக்கான உலக இந்து – புத்த முன்முயற்சி மாநாட்டில் (சம்வாத்) கலந்து கொள்வதற்காக அவர் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் அமைதியாகவும் அனைத்து மக்களும் பங்கேற்கும் வகையில் வெற்றிகரமாக நடைபெற்றது, நாட்டின் ஜனநாயகத் தன்மையை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இலங்கையின் சிறந்த தலைவியாக இந்தியா – இலங்கை இடையேயான உறவை மேம்படுத்துவதற்கு உதவியதற்கு திருமதி. சந்திரிகாவை பிரதமர் பாராட்டினார். ஒருங்கிணைந்த இலங்கைக்கான கட்டமைப்பை கொண்டு வருவதற்காக அனைத்து தரப்பு மக்களின் கனவான சமூக நல்லிணக்கத்தையும் சமரசத்தையும் கொண்டு வருவதில் திருமதி. சந்திரிகா முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

இலங்கையுடன் இந்தியா கொண்டுள்ள உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதை நினைவு கூர்ந்த பிரதமர், இரு நாடுகளும் ஆழமான உறவு கலாச்சாரம் மற்றும் வரலாற்றைக் கொண்டுள்ளது என்று கூறினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இலங்கையின் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருடன் நெருக்கமாக இணைந்து பணிபுரிய ஆவலுடன் உள்ளதாக பிரதமர் கூறினார்.

••••••