Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இலங்கை பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்கவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூட்டாக அளித்த பத்திரிக்கை அறிக்கை

இலங்கை பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்கவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூட்டாக அளித்த பத்திரிக்கை அறிக்கை

இலங்கை பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்கவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூட்டாக அளித்த பத்திரிக்கை அறிக்கை

இலங்கை பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்கவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூட்டாக அளித்த பத்திரிக்கை அறிக்கை

இலங்கை பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்கவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூட்டாக அளித்த பத்திரிக்கை அறிக்கை

இலங்கை பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்கவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூட்டாக அளித்த பத்திரிக்கை அறிக்கை

இலங்கை பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்கவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூட்டாக அளித்த பத்திரிக்கை அறிக்கை

இலங்கை பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்கவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூட்டாக அளித்த பத்திரிக்கை அறிக்கை

இலங்கை பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்கவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூட்டாக அளித்த பத்திரிக்கை அறிக்கை


மரியாதைக்குரிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களே,

ஊடக உறுப்பினர்களே,

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க அவர்களே, உங்கள் குழுவின் உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி வெற்றிப் பெற்றதற்கு மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களின் முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு நீங்கள் இந்தியாவை தேர்ந்தெடுத்தது எங்களுக்கு கவுரவத்தை அளித்துள்ளது. இலங்கையின் பிரதமராக உங்களின் கடந்தகாலமும் முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் காலமும் ஒன்றாக அமைந்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியா – இலங்கை இடையேயான இணைபிரியாத உறவில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மிகுந்த மதிப்பு மிக்க நண்பரான உங்களின் இலங்கையின் வளர்ச்சிக்கான கனவும், அதற்கான உறுதியும் இந்தியாவில் வியந்து போற்றப்படுகிறது.

இலங்கைக்கு மட்டுமின்றி, இந்தியா – இலங்கை இடையேயான உறவுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க ஆண்டாகும். பிப்ரவரி மாதத்தில் இலங்கை அதிபர் திரு. சிரிசேனா வருகையின் போது அவரை வரவேற்று விருந்தளிக்கும் கவுரவம் எங்களுக்கு கிடைத்தது. மார்ச் மாதம் இலங்கைக்கு நான் ஒர் அற்புதமான பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது பிரதமர் விக்ரமசிங்க இங்கு நம்முடன் உள்ளார்.

மாற்றம், சீர்திருத்தம், சமாதானம் மற்றும் வளர்ச்சிக்காக இலங்கை இந்த ஆண்டு இருமுறை வாக்களித்துள்ளது. இலங்கையின் ஜனநாயகப் பாரம்பரியத்திற்கு இதைவிட வலுவான சான்று இருக்க முடியாது. அமைதியான, உள்ளடக்கிய மற்றும் செழிப்பான வருங்காலத்தை நோக்கி இலங்கை சென்று கொண்டிருப்பதற்கு இதைவிட தெளிவான அறிகுறி இருக்க முடியாது.

நெருங்கிய அண்டை நாட்டு நண்பரான இலங்கை எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறவும் வருங்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கவும் நாங்கள் வாழ்த்துகிறோம். இந்தியா எப்போதும் உங்களுக்கு தொடர்ந்து ஆதரவை அளிக்கும்.

கடந்த சில காலங்களாக இலங்கை அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நம்பிக்கைக்குரிய காலத்தில் இலங்கையின் தலைமை முக்கிய அரசியல் ஒற்றுமையை வெளிப்படுத்தி உள்ளது.

இலங்கை நாட்டின் தலைமையின் அறிவுக்கூர்மையாலும் விடாமுயற்சியாலும் மற்றும் மக்களின் ஆதரவுடன் இலங்கை நியாயமான சமரசத்தையும் வளர்ச்சியையும் அடையும். இதனால், அனைத்து இலங்கை மக்களும் இலங்கை தமிழ்ச் சமுதாயம் உட்பட அனைவருக்கும் சமமான நியாயமான அமைதியான மற்றும் கண்ணியமான வாழ்க்கை ஒன்றுபட்ட இலங்கை நாட்டில் கிடைக்கும்.

உங்களின் வளர்ச்சி நம் இரு நாடுகளுக்கும், தெற்கு ஆசியாவிற்கும் நமது கடல்சார் பகுதிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.

இன்று நானும் பிரதமர் விக்ரமசிங்கவும் சிறப்பான ஆலோசனையில் ஈடுபட்டோம்.

மார்ச் மாதம் முதல் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் நாணய மாற்றத்திற்கான ஏற்பாடு உட்பட சில முக்கிய வளர்ச்சிகளை நாங்கள் இருவரும் வரவேற்றோம். வளர்ச்சிக்கு தேவையான இரு நாடுகளுக்கும் இடையேயான முன் முயற்சிகளும் திட்டங்களும் இப்பொழுது விரைவாக செயல்படும் என்று நாங்கள் நம்பிக்கை தெரிவித்தோம்.

எங்கள் இருவருக்கும் ஆழமான பொருளாதார ஒப்பந்தம் வேண்டும். நமது வர்த்தகம் மேலும் வளர்ச்சி அடைவதுடன் இலங்கையில் சமமான வளர்ச்சி அமையவும் நாங்கள் விரும்புகிறோம். வெளிப்படையான மற்றும் போட்டியுள்ள இந்திய சந்தையில் வர்த்தகம் மற்றும் முதலீடு சார்ந்த இரு நாட்டு ஏற்பாடுகளுடன் இந்த இலக்குகளை எப்படி அடைவது என்பதைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமாக உள்கட்டமைப்பு, எரிசக்தி, போக்குவரத்து துறை ஆகியவற்றில் கலந்துக் கொள்ள ஆர்வமாக உள்ள இந்திய முதலீட்டாளர்களின் ஆதரவை நான் கோருகிறேன்.

இரு நாடுகளுக்கும் இடையேயான அனைத்து பிரிவையும் சார்ந்த சமூகத்தினர் பயன் அடையும் வகையில் மனித உறவு, பொருளாதார இணைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று நான் கூறினேன்.

உள்கட்டமைப்பு, ரயில்வே, எரிசக்தி, சமூக வளர்ச்சித் திட்டங்கள், வேளாண், திறன் மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் மக்கள் பயன்படுத்தக்கூடிய அணுசக்தி துறை ஆகியவற்றில் இரு நாட்டிற்கும் இடையேயான அர்ப்பணிப்பு தொடரும் என்று பிரதமர் விக்ரமசிங்கவிடம் நான் உறுதி அளித்தேன்.

இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவை வளர்க்க பணியாற்றுவோம். இப்போதுதான் இரு நாடுகளுக்கு இடையேயான ஆர்வத்திற்குரிய ஐந்து நாள் கிரிக்கெட் போட்டித் தொடரை நிறைவு செய்துள்ளோம். மிகச்சிறந்த விளையாட்டு வீரரான குமார சங்ககாராவை கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் நாங்கள் அனைவரும் அவரின் சிறந்த விளையாட்டை இழந்துள்ளோம்.

நமது நெருங்கிய பாதுகாப்பு சார்ந்த விஷயங்களை கண்டறிந்து, இருவரும் தேவைக்கேற்ப செயல்பட வேண்டும். பாதுகாப்பு ஒத்துழைப்பு துறையில் நமது அர்ப்பணிப்பை மீண்டும் நாங்கள் உறுதி செய்துகொண்டோம்.

தீவிரவாத ஒழிப்பில் நமது ஒத்துழைப்பை மேம்படுத்தி கடல்சார் அண்டை பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் நிலையான தன்மைக்காக நாங்கள் பணியாற்றுவோம். பாதுகாப்பு பயிற்சி திட்டத்தில் இலங்கை எங்களின் மிகப் பெரிய கூட்டாளியாகும். இத்துறையின் ஒத்துழைப்பை விரிவடையச்செய்ய இரு நாடுகளும் தங்கள் முயற்சிகளை தொடரவேண்டும்..

பிரதமரும் நானும் மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். இரு தரப்பிலும் உள்ள மீனவர்கள் சங்கங்கள் இதற்கான தீர்வை கண்டறிய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.
இப்பிரச்சினையை வாழ்வாதாரத்தை பாதிக்கும் மனித நேயம் சார்ந்த பிரச்சினையாக கருதி அணுக வேண்டும் என்று நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன். ஆழ்கடல் மீன் பிடிப்பில் இந்திய மீனவர்களை ஊக்குவிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் தெரிவித்தேன்.

இறுதியாக இருவரின் வெற்றியிலும் நிலையான தன்மையிலும் இரு பகுதிக்கான வளர்ச்சியிலும் இந்தியாவும் இலங்கையும் பெரிய அளவில் பங்கு கொண்டுள்ளது.

இந்த உறவு சாதாரண இந்தியர்கள் மற்றும் இலங்கை மக்களின் இதயத்தைத் தொடும் உறவாகும். இரு நாடுகளுக்கும் இது முக்கியமான ஒன்றாகும். இலங்கை அதிபர் சிரிசேனா மற்றும் பிரதமர் விக்ரமசிங்கவுடன் நாம் வருங்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்கலாம்.

நன்றி.

•••••••